ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label மலர்விழியின் கவிதைகள். Show all posts
Showing posts with label மலர்விழியின் கவிதைகள். Show all posts

Sunday, December 20, 2009

நீ இந்த உலகத்தில்..! - காதல் குறுங்கவிதைகள்



நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

                        *** + ***
என் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பாத
என் மனது..?
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
 
                        *** + ***

கடற்கரையின் மணற்பரப்பில்
கவலையின்றி பேசிக் கொண்டிருக்கும்
காதலர்களைப் பர்க்கும் போதெல்லாம்
எனக்குள்ளும் அந்த ஆசை பிறக்குமடா..?
உன்னுடன் நானும்
இதுபோல் எப்போது
அமர்ந்து பேசப் போகிறேன் என்று..?

                               *** + ***
அன்பே..!
நீ இந்த உலகத்தில்
யாரோவாக இருக்கலாம்..!
ஆனால்
நீதான் எனக்கு
உலகமே..!   

                              *** + ***
காதலென்பது
பொதுவுடமை என்கிறார்களே..?
அது உண்மைதானடா..!
நீ என்பது நானானேன்…
நானென்பது நீயானாய்…
நம் இருவரும் சேர்ந்து 'நாம்' ஆனோம்..!
இதுதானே பொதுவுடமை..!

                             *** + ***
உயிரே..!
உன்னுடைய பிறந்த நாளை
என்னுடைய பிறந்தநாளாக நினைத்து
அனைவருக்கும் இனிப்பு
கொடுத்து மகிழ்கிறேன்..!
ஏனெனில்…
நீ எனக்காகப் பிறந்தவனாயிற்றே..!

                                        - மலர்விழி மோகனன்
                              *** + ***                           




Tuesday, December 8, 2009

ஒரே ஒரு நொடியில்..!


அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…
அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!
கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…
அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!
களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…
அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!
என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!
                                    
                                                 - மலர்விழி மோகனன்




Monday, November 30, 2009

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!



தனியாக கிளைத்து
முளைத்திருக்கும்
என்னுடைய பல்லைப் பார்த்து
'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!
அழகற்ற எனைப் பார்த்து
'அழகின் சிகரமே' என்றாய்..!
என் சாதாரண நடையைக் கூட
'அழகு மயில்' நடையென்றாய்..!
ம்ம்ம்… உன்னைப் போலவே
அழகாய்த்தானிருக்கிறது…
நீ சொல்லும் பொய்களும்..!

                                               - மலர்விழி மோகனன்

(என்னைப்பற்றி என்னவளின் மனதில் உள்ளதை, அவளின் பேரில் வடித்த கவிதை)