அன்று நீ இப்பூமிக்கு வந்த தினத்தை
நினைத்துப் பார்க்கிறேனடா அகிலா
இன்றும் ஆறாத வடுவாய் ஆகிப்போனது
நீயிங்கு அவதரித்த அன்றைய தினம் (1)
செஞ்சுடராய் நீ பிறந்திருக்கிறாய் என்று
நான் நினைத்துக்கொண்டு இருந்த போது
மஞ்சள் காமாலை இவனுக்கு - இன்னும்
இருபத்திநான்கு மணி நேரம் போகட்டும் (2)
உயிர் பிழைப்பானா மாட்டானா என்று
உனைப் பரிசோத்தித்த மருத்துவனின் விடை
உயிரே போனது போலாயிற்று எனக்கு
உன் தந்தையின் கண்களில் கண்ணீர் கடை! (3)
உடல் கிழித்து உனை ஈன்ற அன்னைக்கு
என்ன பதில்கூறுவேன் என்ன செய்வேன்?
உடன்பிறப்பு தம்பியென மகிழ்ந்த உன்
அண்ணனுக்கு என்ன பதில் கூறுவேன்? (4)
கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க
தொண்டைக் குழிக்குள் பெருந்துன்பம் அடைக்க
மண்ணுக்கு நீ வாராமலிருந்திருக்கலாம் மகனே
என நினைக்க வைத்த நாட்கள் அவை அகிலா! (5)
ராச மருத்துவரின் கண் பட்டு கை பட்டு
மஞ்சள் பூத்ததெல்லாம் மறைந்து போக
பூசை செய்யும் ஐம்பொன் மேனியனாய்
அகிலத்தில் வளர்ந்தாய் எங்கள் மகனே! (6)
அன்று நீ தாங்கிய மருத்துவ சிகிச்சைகள்தான்
உனை இன்று உரமேற்றி இருக்கின்றனவோ
என்று நானும் உன் அன்னையும் அடிக்கடி பேசிக்
கொள்வோம்..! சிலாகித்துக் கொள்வோம்! (7)
குறும்புகளின் மொத்த உருவமாய் இருப்பதும்
இரும்பென எதையும் தாங்கும் உறுதியிருப்பதும்
அரும்பென மலரும் அழகு புன்னகை இருப்பதும்
உனக்கே உனக்கென வாய்த்த சொத்துகளடா! (8)
எங்களின் பதிற்றுப்பத்தே, எம்வம்சத்தின் முத்தே
அகிலம் ஆண்ட பராந்தக சோழனின் பெயரினில்
பங்கு பிரித்து அகிலனென பெயர் சூட்டினோமன்று
அகிலமாளும் காலத்தில் வாழ்த்துவோம் நின்று! (9)
அன்பு, பண்பு, அறிவு, ஆற்றல், செல்வம், நீளாயுள்
ஆளுமை, திறமை, பொறுமை, வாய்மை பெற்று
இன்பத்தோடு என்றும் வாழ்க எம்மிளைய மகனே
உனக்கென் பத்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து! (10)
ட்விட்டரில் தொடர
Showing posts with label அகிலன். Show all posts
Showing posts with label அகிலன். Show all posts
Monday, June 4, 2018
Thursday, June 4, 2015
எங்கள் உலகின் வானவில்லாய்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை
காய்ந்து கிடக்கும் பூமிக்கு
வளத்தைத்தரும் வான மகள்
மழை தரும்போது
முறுவலிக்கும் வானவில்லின்
நிறங்களுமிங்கே ஏழு!
நாம் வாழும் பூமியை
கடலைத் தவிர்த்து
நிலப்பரப்பின் அடிப்படையில்
பிரிக்கப்பட்ட கண்டங்களின்
எண்ணிக்கையுமது ஏழு!
பூமியில் இயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
மனிதன் செயற்கையாய்
வகைப்படுத்திய அதிசயங்களும்
இங்கே ஏழு!
காலச் சக்கரத்தின் வேகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
காலத்தை கணக்காய்
வகைப்படுத்திய போது
வாரத்தின் நாட்களுமிங்கே ஏழு!
உலகின் மூத்த மொழியாம்
முத்தமிழின் முத்தான இலக்கியங்கள்
வகைப்படுத்திய
பிள்ளைப் பருவங்களின்
எண்ணிக்கையது ஏழு!
மழலையாய் இருந்த போது
நீ அழுகையில்
உனை அமைதிப்படுத்த
உன் அன்னை பாடிய தாலாட்டிசையின்
சுரங்களின் எண்ணிக்கையும் ஏழு!
எங்கள் உலகின் வானவில்லாய்
பெருமழையாய், பேரிசையாய்
அதிசயமாய், அழகிய இளவலாய்
இந்நாளில் பிறந்தாயே என் அகிலா…
இன்றோடு உன் அகவை ஏழு!
(இன்று எனது இளைய மகன் க. அகிலனின் ஏழாவது பிறந்தநாள். உன் அன்னை மட்டுமல்ல அகிலமே பெருமைப்படும்படி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும். நிச்சயம் நீ சாதிக்கப் பிறந்தவன்.அன்பு, மதி, செல்வம் அனைத்தையும் நீ ஆண்டு, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க மகனே..!)
வகைப்பாடு
Birthday poems,
Special post,
அகிலன்,
அனுபவம்,
பிறந்தநாள் கவிதை,
பிறந்தநாள் வாழ்த்து,
புனைவு
Wednesday, June 4, 2014
ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!
ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!
புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!
உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!
உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!
இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!
ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!
(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )
வகைப்பாடு
Birthday poems,
Special post,
அகிலன்,
அனுபவம்,
பிறந்தநாள் கவிதை,
புனைவு
Tuesday, June 4, 2013
அன்பால் அணைக்கும் அகிலா..! - பிறந்தநாள் கவிதை
ஒரு மகவு போதுமென தந்தை யான்
உன்னத முடிவெடுத்திருந்தேன் - உன் தாயோ
மற்றொரு மகவு எனக்கு வேண்டுமென
சன்னதம் செய்து உனைப் பெற்றெடுத்தாள்
முதல் மகவின் துணைக்குத் துணையாக
இணைக்கு இணையாக உனை ஈன்றெடுத்தாள்
மருந்தென உனை நினைத்து வாழ்வில்
வேண்டாமென நினைத்திருந்தேன்
விருந்தென வந்து விழுந்தாய் - மடியில்
விழுதெனப் பற்றி விட்டாய் அகிலா..!
குறுகுறு மழலைப் பார்வைகள் மறைந்து
துறு துறு பருவத்தை எட்டி விட்டாய்
மரணத்தை அலற வைத்து இம்மண்ணில்
மழலையென நீ மலர்ந்தாய் - பிறந்த பின்
காலனைக் கதற வைத்து இக்கலி
யுகத்தில் கம்பீரமாய் கால் பதித்தாய்!
அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம்
கதிர் கண்ட பனிபோல் மறைந்து போயின!
இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஐந்து ஆயிற்று
உனைப் பிடித்த துன்பங்கள் காற்றோடு போயிற்று
அகிலத்தை அன்பால் அணைக்கும் அகிலா
இனி இன்பங்கள் உனை விட்டு அகலா..
வான்முகிலும் இனி உன் பிறப்பை பாடும்
வரலாறும் தன் ஏட்டில் உன் புகழைச் சூடும்!
(எனது இளைய மகனின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )
வகைப்பாடு
Birthday poems,
Special post,
அகிலன்,
அனுபவம்,
கவிதை,
பிறந்தநாள் கவிதை,
புனைவு
Monday, June 4, 2012
அன்பே அகிலா..! - பிறந்தநாள் கவிதை
அன்பே அகிலா- நீ
தத்தித் தத்தி நடைபயின்ற
காலங்கள் கரைந்து போயின..
தடம்பதித்து விளையாடும்
நதியைப் போல்
நான்காவது அகவையில்
நீ இன்று காலடி எடுத்து வைக்கிறாய்...
நல்லவற்றை உன்னோடு
கொண்டு சென்று
உயர்வு எனும் கடலில் கலப்பாய்...
உலகத்தை உய்விப்பாய் அகிலா...
உந்தையின் அவா இதிலா...
உமக்கென் பிறந்தநாள் வாழ்த்துக்களடா...
*******************
அன்பே அகிலா - நீ
அழகிய வான் முகிலா?
நீ வாலுவின் வாண்டு
என் மனதை வருடும் வண்டு
நீ பெயர்ச்சொல் குறும்பு- இனி
என் பெயர் சொல்ல விரும்பு..!
- அம்மு கணேசன்
*******************
வகைப்பாடு
Birthday poems,
Special post,
அகிலன்,
அனுபவம்,
கவிதை,
பிறந்தநாள் கவிதை,
புனைவு
Saturday, June 4, 2011
எம்மிளைய மகவாய்..! - பிறந்தநாள் கவிதை!
செந்தமிழ்த்தாய் வாழுகின்ற
இத் திருநாட்டில்
எம்மிளைய மகவாய்
பிறந்தாயே என்னகிலா..!
உன் பிறப்பால் நான் உவகை
கொண்டது போதாது!
மீறின் அது குல நலமாகிவிடும்..!
அதை யான் வேண்டேன்..!
இப்புவி உவகை கொள்ளும்படி
செய்து விடு பொன்னகிலா..!
அதுதான் உலக நலமாகும்!
உன் தாய் மனம் குதுகலமாகும்..!
எங்களின் புரட்சி மணத்தில் பூத்த
இரண்டாவது பூமலரே...
என் குடும்பமெனும் பூங்காவில்
முகிழ்த்திட்ட வாச மலரே..!
பிறப்பதுமிறப்பதும் ஓர் முறை...
இருக்கும் வரை இன்பத்தை
அனைவர்க்கும் வழங்கிடு...
அகிலத்தை அன்பால் வளைத்திடு..!
துணிச்சலை ஆயுதமாக்கி...
தூய அறிவை துணையாக்கி...
தமிழை அமுதாக்கி...
தடைகளனைத்தையும் உடைத்திடு..!
சமதர்ம உலகின் தலைவன்
நீதான் எனக் காட்ட
சரித்திரத்திதை மாற்றி எழுதிட
துணிந்து எழுந்திடு..!
இங்கே முத்தமிழும் மூன்று
முக்கனியும் மூன்று
உன் அகவையும் மூன்று
என் மகிழ்சிக்கு இதுவே சான்று!
உலகிலுள்ள எல்லா நலங்களும்
வளங்களும் உன்னடி சேர
இந்த மூன்றாமாண்டில்
முத்துக் கவி பாடுகிறேன்..!
என் இளஞ்சேயே உன் வடிவில்
எந்தையைக் காணுகிறேன்
இன்று போல் என்றும் வாழ
உந்தை புதுக்கவி பாடுகிறேன்..!
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!
இவ்வகிலம் இருக்கும் வரை
என்னகிலா நீ வாழ்கவே..!
(எனது இளைய மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )
வகைப்பாடு
Birthday poems,
அகிலன்,
கவிதை,
பிறந்தநாள் கவிதை,
புனைவு
Friday, June 4, 2010
கவி நேசனின் கவிமகனே..! - பிறந்த நாள் கவிதை..!
உமையவளின் இளைய மகனே..!
உற்சாகத்தின் இருப்பிடமே..!
கவி நேசனின் கவிமகனே..!
கவி நிலவாய் சிரிப்பவனே..!
அகிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கிள்ளை மொழி பேசிப் பேசி...
கிட்டா இன்பம் தந்தவனே...
லட்சம் பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
ன்றோடு நீ பிறந்து ஆண்டிரண்டு
ஆயிற்று... மனமகிழ்ச்சியும் கூடிற்று..!
பிறப்பால் எமை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலி
றவாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
ந்தியாவையே மகிழ்விப்பாயடா..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
தடமொன்றை பதிப்பாயடா..!
அதில் நல்லோரை சேர்ப்பாயடா..!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லு
ள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க..!
(எனது இளைய மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாக படித்துப் பாருங்கள்... என் மகனின் பெயர் கிடைக்கும்)
உற்சாகத்தின் இருப்பிடமே..!
கவி நேசனின் கவிமகனே..!
கவி நிலவாய் சிரிப்பவனே..!
அகிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கிள்ளை மொழி பேசிப் பேசி...
கிட்டா இன்பம் தந்தவனே...
லட்சம் பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
ன்றோடு நீ பிறந்து ஆண்டிரண்டு
ஆயிற்று... மனமகிழ்ச்சியும் கூடிற்று..!
பிறப்பால் எமை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலி
றவாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
ந்தியாவையே மகிழ்விப்பாயடா..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
தடமொன்றை பதிப்பாயடா..!
அதில் நல்லோரை சேர்ப்பாயடா..!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லு
ள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க..!
(எனது இளைய மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாக படித்துப் பாருங்கள்... என் மகனின் பெயர் கிடைக்கும்)
வகைப்பாடு
Birthday poems,
Special post,
அகிலன்,
அனுபவம்,
கவிதை,
பிறந்தநாள் கவிதை,
புனைவு
Subscribe to:
Posts (Atom)




