ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Teachers day poem. Show all posts
Showing posts with label Teachers day poem. Show all posts

Monday, March 21, 2016

ஏனிப்படி..?


இளமையில்...
வறுமையில்...
அறியாமையில்...
இயலாமையில்...
"ஏனிப்படி" இருக்கிறோம்?
என்று எண்ணுகின்ற
விளிம்புநிலை மாணவர்களின்
'ஏணிப்படி'யே
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

(இன்று உலக கவிதை தினம்... இத்தகைய சிறப்பான தினத்தில்... எனை வளர்த்த, எமைப்போன்றவர்களை வளர்த்துக்கொண்டிருக்கும் அரசுப்பள்ளி ஆசிரிய சமூகத்திற்கு இக்கவிதை சமர்ப்பணம்.

நேற்றைய தினம் (20.03.2016) திருப்பத்தூரில் நடைபெற்ற 'ஆசிரியர் வைபவம்' எனும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அந்நிகழ்ச்சியின் முடிவில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராப் கேட்க, அப்போது எழுதிக் கொடுத்த கவிதை இது... நிகழ்வின் அழைப்பிதழ் இங்கே... http://moganan.blogspot.com/2016/03/blog-post_18.html)




Monday, November 23, 2009

என் தமிழாசானுக்கு... - மரபுக்கவிதை



குருகுல வாசம் பயிலவில்லை நின்பாதத்
திருத்தாழ் பணியவில்லையாயினும் - நீரெனக்கு
அருந்தமிழ்ப் பயில்வித்து ஐயம் நீக்கினீர்
மருந்தமிழே யுனை மறவேன்                        
                                                             - மோகனன்

(எனது சென்னை வாழ்விற்கு காரணமாயிருந்த, எனது இளங்கலை வகுப்பின் தமிழாசிரியர்களுள் ஒருவரான திரு. நல்லதம்பி ஐயா அவர்களை 21.11.2009 அன்று சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர்.  இந்திய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் (UGC - NET Exam) தேர்விற்காக, அவரிடம் இன்று ( 21.11.2009)  மீண்டும் பாடம் படித்தேன். 


எனக்கமைந்த தமிழாசிரியர்களுள் சிறந்தவர் திரு. நல்லதம்பி ஐயா அவர்கள், அவருடன் தியாகராய நகருக்கு (அன்று மாலை 6.45 மணி அளவில்) பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்காக எழுதிய வெண்பா வடிவில் எழுதிய மரபுக் கவிதை. அதை அவரிடம் கொடுத்தேன்... படித்து, பின் பாராட்டி மகிழ்ந்தார்...


அதே மகிழ்ச்சியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்)




Friday, September 4, 2009

எங்கள் ஆசிரியர்..!

கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... 
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

னிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே...
னிய கதை சொல்லித்தந்த  எங்கள் ஆசிரியையே...
ன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!

லக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ர் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையே..!

ண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...
ளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...
ற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!

ம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
யங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!

ர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...
ர்குலம் நாமெல்லாம்  என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
வை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...

(எ)ஃகணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!
                                                             

(செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம், இந்நாளில் என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் உரித்ததாகட்டும்... வாழ்க ஆசிரியர் குலம்...)