முகமில்லாமல் போன எத்தனையோ முகங்களுக்கு
முகம் கொடுத்த சேவையமைப்புகளில் முத்தாய்ப்பாய் நீ!
கல்விச் செல்வம் பெறுவதற்கு பொருட் செல்வமற்ற
கள்ளமில்லா உள்ளங்களுக்கு 'கற்பகத் தரு'வாய் நீ!
வலிகளைக் கூட வலிந்து சென்று ஏற்றுக் கொண்டு
கற்போர் முகங்களில் மகிழ்ச்சியைத் தரும் மந்திரமாய் நீ!
ரிதமோ, இசையோ, பொருளோ தராத ஞானத்தைத்
தரும் கல்விக்கே முகவரி கொடுத்த முகவரியாய் நீ..!
(வறுமைக் கோட்டிலிருக்கும் திறன்மிகு கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்குத் தேவையான நிதி உதவிகளை கொடையாளர்களிடமிருந்து பெற்று, அவற்றை அம்மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சேவை அமைப்பிற்காக நானெழுதிய கவிதை இது. முதல் வரிகளில் உள்ள தடித்த முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால் அந்த அமைப்பின் பெயர் உங்களுக்கு புலப்படும். புலப்படுகிறதா?
நீங்களும் இந்த அமைப்பிற்கு உதவ விரும்பினால்: http://www.mugavarifoundation.org
சென்னை, வேளச்சேரியில் உள்ள இந்த சேவை அமைப்பை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நடத்தி வரும் திரு. ரமேஷ் அவர்களுக்கும், எதிர்காலத்தில் நட்சத்திரங்களாய் மின்னப்போகும் இந்த அமைப்பின் மாணவர்களுக்கும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்)
