ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 13, 2013

முத்தாரக் கவியெடுத்து..! - பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை



முத்துத் தமிழெடுத்து முத்தாரக் கவியெடுத்து
உன் மாமன் வருகிறேன் பிறந்தநாள் வாழ்த்துப் பாட
குயிலாய் குரல் கொடுக்கும் குழவியாயிருந்த நீ
இன்றோடோராண்டை எட்டுகிறாய் மருமகனே- உனக்காக
ந்திர லோக சபையை நான் கூட்டட்டுமா..!
மாமன் முதுகிலேற்றி உலகைக் காட்டட்டுமா..!
ங்க நண்பனுக்கு தப்பாமல் நீ பிறந்தாய்..!
தங்க மகனென்று போற்றிடவே நீ வளர்வாய்..!
ன்று மட்டுமன்று என்னாளும் ஊருலகம் உனைப்
போற்றும்படி வாழ்வாங்கு வாழ்கவென் மருமகவே!
*********************************************************************************
 (எனது ஆருயிர் நண்பனும், எனக்கு தோள் கொடுக்கும் தோழனுமான வ.நவநீதகிருஷ்ணனின் மகனாகிய எனது மருமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அவனுக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை. பிறந்தநாள் கொண்டாடும் எனது மருமகனின் பெயர் தெரியவிரும்பினால் கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... குதுகலமாய் உங்கள் நாவில் உலா வருவான் என் மருமகன்...)
************************************************************************************************** 

நானெழுதிய புதிய சிறுகதை
: என்னப் பெத்தவரு




Thursday, December 12, 2013

கைநாட்டு ஆன படிப்பாளிகள்




எம்.டெக்., பி.டெக் என
உயர்படிப்பு படித்தவர்களைப்
பார்த்துப் பார்த்து பணிக்கு எடுத்த
பன்னாட்டு நிறுவனங்கள்
அப்படிப்பாளிகளை
அனுதினமும்
கைநாட்டுக்காரர்களாக்கி விட்டன
அலுவலக வாயிலில்
விரல் ரேகை வருகைப் பதிவு கருவி! 

*******************************************************

நான் எழுதிய புதிய சிறுகதையைப் படிக்க... என்னப் பெத்தவரு  




Monday, November 11, 2013

சிக்கல்..!


சுட்டெரிக்கும் சூரியனைக் கூட
நேருக்கு நேராய்
பார்த்து
விடுகிறேன்...
ஆனால் உன் சுட்டு விழியை
என்னால் பார்க்க முடிவதில்லையே
அது எப்படி?
உன் மொழி ஈர்ப்பு விசையில் கூட
வீழாமல் இருக்கிறேன்
உன் விழி ஈர்ப்பு விசையில்
வீழ்ந்து போகிறேனே
அது எப்படி..?
கம்பீரமாய் எப்போதும்
கண் பார்த்து பேசும் எனை
கண்கட்டி வித்தைபோல்
மண் பார்த்து பேச வைத்தாயே
அது எப்படி?
இப்படி என்னுடைய
அடையாளங்களெல்லாம்
உன்னுடைய ஒற்றைப் பார்வையில்
தடுமாறிப் போகிறதே
அது எப்படி 
என்ற
குழப்பச்சிக்கலில்
நான்
குறும்புச் சிரிப்பில் நீ..! 
-------------------------------------------------

(அன்பர் வே. நடனசபாபதி கேட்டதற்கு இணங்க 'சிக்கல்' எனும் தலைப்பில் இக்கவிதை..  அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கருப்பொருள் 'காதல்'. வேலைப்பளு காரணமாக கவிதை எழுதவதற்கு தாமதம் ஆகிவிட்டது... என்று பொய்யுரைக்க விரும்பவில்லை... இத்தலைப்பில் கவிதை தோணாமல் ஒருவாரம் தவித்துப் போனேன். பின்னர் அழகான கவிதையைப் பார்த்ததும் கிறுக்கி விட்டேன்...)



Blogger வே.நடனசபாபதி said...
உண்டியல் கருத்தும் கவிதையும் அருமை. நீங்கள் கேட்டதால் நான் தருகிறேன் தலைப்பு. ‘சிக்கல்’ என்பதே அது. காத்திருக்கிறேன் கவிதையைப் படிக்க!
October 30, 2013 at 3:35 PM
 Delete




Wednesday, October 30, 2013

உண்டியல்


நீ என்னை சந்தித்துவிட்டு
செல்லும் ஒவ்வொரு முறையும்
உன் நினைவுச் சேகரங்களை
என் மனமெனும் உண்டியலுக்குள்
சேர்த்து வைக்கிறேன்...
என்றேனும் ஒருநாள்
அந்த உண்டியலை
திறந்து பார்க்க மாட்டாயா
என்ற நப்பாசையில்..!

(உண்டியல் என்ற பெயரில் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வாசகரின் வேண்டுகோள். அதில் காதலைக் கொண்டுவரமுடியுமா என்று சவால் விட்டார். முயற்சித்துப் பார்ப்போமே என்று கிறுக்கியதுதான் இது...

இதுபோன்ற சிக்கலான தலைப்பினை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்... அதில் என்ன கருப்பொருள் வரவேண்டும் என்ற சவாலுக்கு நான் தயார்... நீங்கள்..?)




Tuesday, October 29, 2013

சிலந்தி வலை..!


தன்னுயிர் தழைக்க
தன்னுடலை உருக்கி
உமிழ்நீரைப் பெருக்கி
இல்லத்தைக் கட்டும்
சிலந்தியின் வலையைப் போல
உன்னுடலை வருத்தி
உன்னன்பைப் பெருக்கி
உனக்காக வாழாமல்
எனக்காக எல்லாவற்றையும் செய்து
எப்போதும் உன்னையே
நினைக்க வைத்திருக்கும்
உன்னுடைய அன்பு கூட
ஒருவித சிலந்தி வலைதானடி..!




Wednesday, October 23, 2013

குளிர் தென்றல்!


நடுங்கும் பகல்
பொழியும் மழை
சோம்பல் மேகங்கள்
ஆம்பல் சூரியன்
நடுக்கத்தில் பறவைகள்
ஒடுக்கத்தில் அணிற்பிள்ளைகள்
தங்களுக்குள் தலை புதைக்கும்
நாய்க்குட்டிகள்
கதகதப்பைத் தேடும்
பூனைக்குட்டிகள்
மழையில் முகம் கழுவும்
சாலையோர பூஞ்செடிகள்
தார்ச்சாலையில்
நெளியும் வானவில்கள்
நடைபாதை ஓரத்தில் திடீரென
முளைக்கும் கண்டத் திட்டுகள்
மழை நீரில் கப்பலாகும்
இலைச் சருகுகள்!
என இந்த மாரிக்காலத்தில்
எல்லாவற்றையும்
ரசித்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று மோதும்
குளிர் தென்றல் காற்றில்
எனை நான் மறப்பது போல்
உன் வாசம் வீசும்போதும்
என்னை நான் மறந்து போகிறேன் அன்பே!