ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, May 26, 2010

'கன்னி'த் தமி்ழ்..!


எனைப் பெற்ற தாயிடமிருந்து
தாய்த்தமிழைக் கற்றுக் கொண்டேன்...
அழகான தமிழ்ப் பேச்சு வந்தது..!
என் தாயிடமிருந்து
எனைப் பெற்ற 'கன்னி '
உன்னிடமிருந்து
'கன்னி'த் தமிழைக் கற்றுக் கொண்டேன்...
அழகான கவிதை வந்தது..!
அதுவும் உன்னைப் போலவே
மிக அழகாக..!  



4 comments:

தனி காட்டு ராஜா said...

'கன்னி' பெண் பற்றிய கவிதை ....'கன்னி' யமாக உள்ளது ........'கன்னி ' வைத்து இது போன்ற கவிதைகளை பிடிப்பீர்களோ ...

கலா said...

என் தாயிடமிருந்து
எனைப் பெற்ற 'கன்னி\\\\\

நல்ல வரி{கள்} மோகனன்
பின்னொரு காலத்தில்....
இதே வரிகளை உங்கள்
மகன் சொல்லலாம்,..எழுதலாம்

அழகான படமும்!! நன்றி

மோகனன் said...

கவியைப்பற்றி கண்ணியமாய் கருத்துரையிட்ட தோழர் ராஜாவிற்கு எனது அன்பான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்புத் தோழி கலாவிற்கு...

என் மகன் மட்டுமல்ல... காதல் செய்யும் ஒவ்வொரு தமிழனும் சொல்லுவான்... ஏன் நாளை.. உங்கள் மகன் கூட சொல்லாம்..!

தாங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!