ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, May 16, 2011

செல்போனும் காதலியும்..!


செல்போனும் காதலியும்
இரட்டைப் பிறவிகள் போல..!
எப்போதும் நம் அரவணைப்பிலேயே
இருக்க விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்டால்
முதலில் சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும் வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்கள்..!
நாமாய் பார்த்து அவர்களிடம் பேசும் வரை
ஊமையாய்த்தான் இருப்பார்கள்..!

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை)

4 comments:

Natu said...

மிகவும் அருமையான கவிதை படைப்பு


என் இதயம் நலமா என்று கேட்பவன் நண்பன்
( நட்பு மீது உள்ள நம்பிக்கை )
என் இதயம் நலமா
என்று சோதிப்பவன் காதலன்.....!

By

Bhuvi......

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

அட்டகாசமா எழுதுறீங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

உண்மை நிலையை அழகாக கவிதை நடையில் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு .

மோகனன் said...

வாங்க சங்கர்...

நம்ம தளத்துக்கு தாங்கள் வந்து ஆண்டுக் கணக்கில் ஆகிறது...

நெடுங்காலத்திற்குப் பிறகு, வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!