அன்பை திகட்டத் திகட்டப்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!
அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
அறிவை மறந்தவனாவேன்..!
உன்னை மறந்தேன் எனில்
உயிரையே மறந்தவனாவேன்..!
என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...
என்னுயிரும் உறவும் நினைவும்
எக்கணமும் உன்னைச் சுற்றியே..!
(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை)
25 comments:
Nice lines Moganan Sir....
யார் அந்த கிளி பறக்க விட்டுட்டு இப்ப பீல் பன்ற மாதிரி தெரியுது
By
Bhuvi
இமைகள்
கண்மணி கண்டிராத காதலன்
நொடிக்கு ஒரு முறை தவழுவான்
தூசிகள் உனக்கு தான் என்றாலும்
துடிப்பவன் இவனன்றோ ..........?
By
bhuvi
வாங்க புவனா...
ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி...
என்ன செய்ய கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சி... கூட்ட விட்டு பறந்து போயிடிச்சுன்னுதான் சொல்லணும்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
/தவழுவான் / அல்ல தழுவுவான் என வரவேண்டும் என நினைக்கிறேன்...
இது சரிதானே கவிஞியே...
கலக்கறீங்க மேடம்...
வாழ்த்துக்கள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கடல் கடந்த நினைவலைகள்...
காதலின் வாசனை மாறாமலிருக்கட்டும்..
காதலின் வாசம் இல்லை நண்பா.. அது சுவாசம்... அது என்றென்றும் மாறாமலிருக்கும்...
ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அருமையான கோர்வை தோழா...
வலைச்சரத்தில் வீசியது அத்தனையும் கவிப்பூக்கள் அல்ல.. பூங்காக்கள்...
வாழ்த்துக்கள்...
சரிதான் தோழா .....
நான் கவிஞி ..... அல்ல சாதாரனமனவள்
எதோ எனக்கு தெரிந்த சில சிறுகல் .
By
Bhuvana
ஞாயிறை கையால் மறைப்பார் இல் - கவிஞியே..!
நட்பு
நீயும் நானும் தண்டும் , வேரும்
உன் தூண்டுதலால் வெளி வந்தேன்
(சிறுசெடியாய் )
என் வசந்தம் கண்டு வந்தது
வட்ட வடிவ இலைகளும்
வாசனையோடு பூக்களும்
வட்டமிட்டது வண்ணத்து பூச்சி
வந்த வழியே போனது இலையும், மலரும்,
நிற்கிறேன் நிற்கதியாய்...... என்றாலும்
நீ மட்டும் என்னோடு (வேராய்)
இருவரும் பிரிந்தால்........?
நான் வீழ்வேன் , நீ சிதைவாய்
நம்மை பிரிக்க யாருண்டு ...? மரணத்தை தவிர ........!
By
Bhuvana
அட்டகாசம் புவனா...
உங்களை கவிஞி என்றுதான் சொல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள்... தனி பிளாக் ஆரம்பிங்க..!
சபாஷ் காற்றுக்கும்+பூ வுக்கும் கடும்
போட்டிபோல் தெரிகிறதே!!
நானும் கொஞ்சம் மூக்கை நுழைக்கலாமா?
கண்மணி கண்டிராத காதலன்
நொடிக்கு ஒரு முறை தவழுவான்\\\\\\
கவிஞரே!தவழுவான் என்றும் எடுத்துக் கொள்ளலாமே,
நொடிக்கொருமுறை துடிக்கும் இதயத்தில் தவழலாம்...
எப்போதும் நினைக்க வைக்கும் நினைவில் தவழலாம்...
சதா சிந்திக்கச் சொல்லும் சிந்தனையில் தவழலாம்...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.......
இன்னுமே காணாத காதலனை பட்டென்றுபோய்த்
தழுவலாமா?
தவழும்போது ...புனிதத்துடன் அன்பு வெளிவருகிறது
தழுவும்போது....பல நாட்கள் பழகியவருடன் அன்பு
அணைப்புடன் வெளிவருகிறது
{பழகிய ஒருவர்தான் தழுவமுடியும்
காணத ஒருவர் தழுவமுடியாதப்பா!}
காற்றுத் தழுவலாம்{காணாத} காதலன் தழுவமுடியாது
ஆக கண்மணி கண்டிராத காதலனுக்கு...
தவழுவதுஎன்று வந்தது சரியே என்பது
என் கருத்து மோகனன்.
மன்னிக்க வேண்டிகிறேன்......................................
என்ன!தூசிதட்டி எடுக்கிறீர்களா?
வீட்டுகாரம்மா ஊரிலில்லை என்றதையிரீயமா?
அல்லது படிக்கமாட்டார் என்ற நினைப்பா?
வரட்டும்!வரட்டும்!!
இதைப் படித்தால்{மனைவி} இனிச் சாப்பாடு கிடைக்குமா
நண்பரே!ஐய்யோ..பாவம்
வாங்க கலா...
மூக்கை ஏன் நுழைக்கிறீர்கள்... கருத்தினுள் நுழையுங்கள்...
எதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். இது எனக்கு வேதனையைத் தருகிறது!
விவாதத்திற்கு ஆட்பட்டால்தான் ஒரு படைப்பு முழுமை பெறுவதாக அர்த்தமாகும். தாங்கள் ஒரு வாசகர், அதை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு, ஆக இனி மன்னிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் வேண்டாம்...
இனி விவாதத்திற்கு வருகிறேன் -
கவிதையின் தலைப்பை கவனியுங்கள் கலா - 'இமைகள்' என கொடுத்திருக்கிறார். அங்கே தவழும் என்ற பதம் சரியாக இருக்காது என கருதினேன். ஆதலால்தான் தழுவுதல் என சொன்னேன்...
ஆனால் கவிஞி எதை நினைத்து எழுதினாரோ... அங்கே என்ன வார்த்தை வரவேண்டும் என்று நினைத்தாரோ..? அவருக்கே வெளிச்சம் கலா..!
- தங்களின் ஆரோக்கியமான விசர்சனத்திற்கு நன்றி பாராட்டுகிறேன்.
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
என் நிலை அறிந்து கொண்டீர்கள் அல்லவா...
இனி உங்கள் கிண்டலிலிருந்து தப்ப முடியுமா என்ன..?
எதையும் தூசி தட்டி எடுக்கவில்லை கலா. ஆளை விடுங்கள்..!
வாங்க கலா எப்படி இருக்கீங்க ...
இங்கிலாந்து எப்படி இருக்கு ...
கண்மணி கண்டிராத காதலன்
நொடிக்கு ஒரு முறை தழுவுவான்
என்றே வர வேண்டும் ....
நான் கொடுத்திருக்கும் தலைப்பு " இமைகள் "
ஒரு சிறு எழுத்து பிழையால் பெரிய விளக்கம் கிடைத்துள்ளது .
super..... Super..... Super....
I dont know tamil typing... your poetry is very nice good... keep forward your work... now i became fan of you..!
அன்பு சதீஷ் அவர்களுக்கு...
தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு நன்றி... நன்றி... நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பு மகாராஜா அவர்களுக்கு...
தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு நன்றி... நன்றி... நன்றி..!
எனக்கு ரசிகனாக வேண்டாம், கவிதை நன்றாக இருப்பின் அதற்கு ரசிகனாக இருங்கள்... நான் அந்தளவிற்கு பெரியவனல்ல...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கவிஞியின் கருத்துடன் என் கருத்து ஒத்துப் போனது குறித்து மகிழ்கிறேன்...
ஆரோக்கியமாய் விவாதித்த கலா, புவனா ஆகியோருக்கு எனது நன்றிகள்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Nice...
ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Mohan anna ungal kavitai varigal anaithum..... mei marakka seikinrana....!!!
அன்பு ராஜ்...
நன்றி... நன்றி... நன்றி..!
Post a Comment