ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, August 16, 2011

கட்டற்ற காதலுக்குள்..!


கட்டற்ற காதலுக்குள்
கட்டுப்பாடுகள்
விதித்துக் கொண்டோம்!
கண்ணியமாய் நடந்து கொள்ள
உணர்வுகளைப்
புதைத்துக்கொண்டோம்..!
உன் உயிரினை
நான் தொடும் போதும்
என் உயிரினை
நீ தொடும் போதும்
எட்ட நின்று
ஏக்கப் பெருமூச்சு கண்டோம்..!
காலம் தாழ்த்தி
சந்தித்தது ஏன் என்று
வினவியபடி...
நீ விதியைக் குறை சொன்னாய்
நான் மதியைக் குறை சொன்னேன்...
காலம் நமைப் பார்த்து சிரித்தது
அது நான் செய்த சதியென்று..!


------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 8 )




11 comments:

Anonymous said...

Nice pa super-ah erukku...........

by "RATHI"

மோகனன் said...

நன்றி... நன்றி.. நன்றி ரதி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Prem S said...

arumai nanparae arumai

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நணுபரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது மோகன்.

முனைவர் இரா.குணசீலன் said...

காலம் நமைப் பார்த்து சிரித்தது..

காதலர்களைப் பார்த்தால் இயற்கைக்குக் கூட சிரிப்பு வந்துவிடுகிறது..

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பா.

காலம் குறித்த எனது பதிவைக் காண அன்புடன் அழைக்கிறேன்

http://gunathamizh.blogspot.com/2011/09/x.html

மோகனன் said...

தங்களின் வருகைக்கு நன்றி குணசீலரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

யசோதா காந்த் said...

arumai nanpare

மோகனன் said...

ரசித்தமைக்கும், ரசித்து என்னோடு இணைந்தமைக்கும் மிக்க நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Ask Dweeby said...

Very creatiive post