ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 23, 2012

யார் செல்வந்தன்?உழைத்துக் களைத்த
உடலுக்கு...
உறக்கம் வந்தால்
இடமென்ன...
பொருளென்ன..
அசந்து உறங்க
ஆறடி இடமும்
ஆங்காங்கே கிழிந்த
கந்தல் துணி கூட போதும்!
ஆனால்
அவ்வுழைப்பாளிகளின்
இரத்ததினை உறிஞ்சிக் குடிக்கும்
பணக்கார ஓநாய்களுக்கு
பட்டுமெத்தை இருப்பினும்
பறிகொடுத்து தவிக்கிறான்
தூக்கத்தை…
இதில் யார் செல்வந்தன்?
6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தேகேமே இல்லை... உழைக்கும் தெய்வம் தான்...

சே. குமார் said...

கவிதை அருமை நண்பா....

vimala niranja said...

கவிதையின் வரிகள் கம்யூனிசக் கொள்கையை சுட்டினாலும் புரட்டிப் போடும் புதிய வரிகளை உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி தனபாலரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வா நண்பா...

நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க நிரஞ்சா...

தாங்கள் சொல்வது உண்மை... இனி வருங்காலங்களில் இது போல் புதுமையாய் எழுதுகிறேன்.

நன்றி