பாட்டுக்கொரு புலவா!
– என்றன்
பாட்டுடைத்
தலைவா நின்றன்
ரசிகக் கோடிகளில்
ஒருவன் – உன்றன்
கவிகளுக்கு
அடியார்க்கு அடியன்!
தியாகத் தமிழ்
திருவுருவே – விழியில்
தீஞ்சுடர் செந்தமிழ்க் க(ன்)னலே..!
யாக்கையும் குருதியும்
ஈந்தே – தமிழ்
மொழிக்கே மாற்றம் தந்(தை)தாய்..!
ர்ரென்றாலும் நீயிங்கில்லை
– அமிழ்
தமிழ் கவியால் எங்களுள் வாழ்கிறாய்!
தேசத்தின் மாபெரும்
கவியே – மொழியில்
விடுத்தாய்
விடுதலைத் தணலே..!
சட்டத்தை உடைத்த
ரவியே – பரங்கியன்
கொட்டத்தை
அடக்கிய கவிப்புனலே..!
ம்மாநிலம் பயனுற
வேண்டியே – தீயவற்றை
தீயிட்டழிக்கப் பிறந்த கவிச்சூரியக் கனலே..!
(தேசிய கவிஞர் பாரதியாரின் 130-வது பிறந்த தினம் இன்று. தமிழ் தேசம் இன்று சினிமாவின் பின்னால் போய்க்கொண்டிருக்க, சிற்சில தமிழார்வலர்களாவது பாரதியின் பின்னால் இருப்பது கண்டு மனம் ஆறுதல் கொள்கிறது. தேசியக் கவிக்கு இச்சிறுவனின் கிறுக்கல் சமர்ப்பணம். அவன் வழி தொட்டு வாழிய செந்தமிழ்..!)
4 comments:
கவிதையில் பாரதியின் சுட்டெரிக்கும் பார்வை தெரிகிறது.க(ன்)னலே என்று பாரதியை குறிப்பிட்ட இடத்தில் கனலையும் கரும்புச் சாறாய் சுவைக்க முடிகிறது.வாழ்க பாரதி!பாரதியின் புகழ் பாடும் நின் கவி நீடூடி வாழ்க.!
(சு)வாசித்தமைக்கு நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!
good ur effort sirrrrrrrrr
மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Post a Comment