ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, January 12, 2013

தைப்பொங்கல் வருகுதடி தோழி..! - பொங்கல் தின சிறப்புக் கவிதை



தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல்
வருகுதடி தோழி...
தமிழனின் புகழை
தரணியெலாம்
பாட வருகுதடி தோழி...

நெற்தங்கத்தை
கொட்டிக் கொடுத்த
தமிழ் மண்ணிற்கும்
கதிரவனின் கருணைக்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி செலுத்தும் நாளிதடி தோழி...

நாள் முழுக்க
உழுது களைத்த காளை...
வயலில் உழவன்
சிந்திய வேர்வை...
நெல்மணியான காலம்
போய்விட்டதடி தோழி...

இன்றோ கழனியெல்லாம்
கட்டடமாய் மாறி விட
காய்கறி விளைவித்த மண்ணெல்லாம்
கூறு போட்டு விற்கும் மனையாகி விட
பச்சை பசுமை மறைந்து
பாழ் பட்ட மண்ணாகி விட்டதடி தோழி...

யானை கட்டி நெற் போராடித்த
காலம் போய்
அண்டை தேசத்திடம்
நெல்மணிக்கு
கையேந்தும் காலம் வரப்
போகுதடி தோழி...

கழனியில்
உழைப்பதற்கு இளைஞர்
கூட்டம் சேர்ந்த காலம் போய்
ஊனை சோம்பி வளர்க்க
மதுக்கடையில்
நிரம்பி வழியுதடி தோழி...

சுறுசுறுப்பாய் இருக்க வேண்டிய மக்களோ
அதிகாலை வேளையில்
அரசின் நூறு ரூபாய் பணத்திற்கும்
ஒருகிலோ அரிசி, வெல்லத்திற்கும்
ஒரு கிலோ மீட்டர் தூரம்
வரிசையாய் நிற்கிறார்களடி தோழி...

நகரமயமாக்கலும்
நரக மயமாக்கலும்
நம் பண்பாட்டை மட்டுமின்றி
நம் முன்னோர்
பட்ட பாட்டையும்
சிதைத்து விட்டதடி தோழி

என் செய்வேன் தோழி...
இக்கொடுமைகளைக் காணுகையில்
உள்ளம் குமுறுகிறது - அவர்கள்
உழைத்தறியா மக்களல்ல தோழி
உழைக்கின்ற வர்க்கத்தை - அரசு
பிச்சைக்காரக்களாக்கி விட்டதடி தோழி...

அத்தனையும் மாற்றுகின்ற
சக்தி வேண்டும் தோழி
சரித்திரத்தில் தமிழினத்தை
தலைநிமிர்த்தும் நாள் வேண்டும் தோழி
வேதனையோடு வருகுதடி
தைப்பொங்கல் தோழி...

மாற்றம் தேடி புறப்படுவோம்
வாடி என் தோழி...
தமிழ் மரபை காத்திடுவோம்
வாடி என் தோழி...
வலையுலக நண்பர்களுக்கு
பொங்கல் வாழ்த்து சொல்வோம் வாடி என் தோழி...!

(இப்பூவலகில் காற்றைப் போல் நீக்கமற நிறைந்திருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் என் சார்பிலும், என்னவள் சார்பிலும், எனது குடும்பத்தார் சார்பிலும், எனது நட்புகள் சார்பிலும் இனிய தமிழர் திருநாள், தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன்)













6 comments:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

மோகனன் said...

கவிஞர் பெருமான் வருகைக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வருக..!

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை நண்பா....

Unknown said...

பொங்கலின் ருசி கவிதையில் கூடுது நண்பா..!இதோ புறப்பட்டு விட்டேன் நானும் வயலில் களையெடுக்க...!!

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி நண்பா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

கழனியில் நான் உமக்கு முன்னே இருக்கிறேன்... வருக வருக...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!