வனத்தில் விரவும்
பூந்தென்றல் போலே
வானத்தில் விரவும்
வெண்கதிர்களால் எனை
விடாமல் முத்தமிடுகிறாயே
சற்று மூச்சு விட்டுத்தான்
முத்தமிடேன்
என்று சூரியனிடம்
கொஞ்சினாள் நிலா மதி
வெப்ப நிறை
மூச்சுக்காற்றையும்
வெளிச்ச நிறை
முத்தக்காற்றையும்
விட்டுவிட்டால்
உயிர் நீத்து விடுவேன் அன்பே...
எனை விடுத்து
நீ விலகினால்
இருளைச் சுமப்பாய் அன்பே
என்றான் சூரியன்..!
உன் முத்தமும் வேண்டும்
உன் மூச்சுக்காற்றும் வேண்டும்
மூச்சு முட்ட நீ கொடுக்கும்
முத்தத்தால்
நான் மூர்ச்சையானால் பரவாயில்லை
நீ மூர்ச்சையாகி
விடக்கூடாது அன்பே...
நீ மூர்ச்சையாகி விட்டால்
என் வாழ்வே மூர்ச்சையாகி விடும்
என்றாள் நிலாமதி..!
பூமியை நீ சுற்றிக் கொண்டிருந்தாலும்
உன் மையல் எல்லாம்
என்மேல் என்பதால்தானே
தையல் உன்மேல்
கண்ணாக இருக்கிறேன்
உன்றன் கண்ணாக இருக்கிறேன்
மூர்ச்சையானாலும்
பரவாயில்லை
உனை முத்தமிடாமல் இருக்க மாட்டேன்
என்றான் சூரியன்..!
(எத்தனை நாட்களுக்குதான் மானிடக் காதலைப்பற்றியே எழுதுவது... பிரபஞ்சத்தின் காதலர்களான சூரியனையும் நிலவையும் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது... அதன் விளைவே இக்கிறுக்கல்...)
6 comments:
கிறுக்கல் என்று சொல்லாதீர்கள்.... அழகா எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் மிக அருமை.
மனிதக் காதலானாலும் பிரபஞ்சக் காதலானாலும் காதல் காதல் தான்! சூரிய சந்திர காதல் பற்றிய உருவகக் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
என்னை நீங்கதான் மெச்சிக்கணும் தனபாலரே...
தங்களின் மாறா அன்பிற்கு எனது நன்றிகள்.
மதுரையே வந்து வாழ்த்துகிறதே...
நன்றி சரவணன்
திரு நடனசபாபதி அவர்களுக்கு
தங்களின் ரசனைக்கும் வாழ்த்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...
Post a Comment