அன்பும் அறனும் உடையதுதான் இல்வாழ்க்கை
என்றுணர்ந்து இன்று நீ இவ்வாழ்வில் இணைகின்றாய்!
ருசிகரமானதா? பசிகரமானதா இந்த இல்வாழ்க்கை
என்பதை சோதித்து சாதனை படைக்கப் போகின்றாய்!
ணானல் போல் வளைந்து கொடுத்து வாழப் பழகி
பரணியுடன் நீ உன் தரணியை ஆளப்போகின்றாய்!
ச்சமூகத்தில் இன்று மூதல் நீயும் ஓர் அங்கமாகி
அனைவருக்கும் நிகரான குடும்பத் தலைவனாகின்றாய்!
சந்ததி தழைக்க வேண்டி சந்தோஷம் பெருக வேண்டி
இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டில், தாலி கட்டப் போகின்றாய்!
லட்சலட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும் கொடுக்க முடியா
சந்தோஷ நல் வாழ்க்கைதனை இனி நீ வாழப் போகின்றாய்!
ம்மாநிலத்தில் என்றென்றும் மனமொத்த தம்பதிகளாய்
வாழையடி வாழையாய் வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்!

பனி படர்ந்த ரோஜாவின் மென்மை குணம் கொண்டு
பிறந்த குலத்தின் பெருமையைப் போற்றி, வளரும் குலத்தின்
ரத்தினமாய் என்றும் நீ ஜொலிக்க வேண்டும் பெண்மணியே!
இல்வாழ்வில் விட்டுக் கொடுத்து வாழப்பழகு கண்மணியே..!
ணிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களும்
எங்களோடிணைந்து வாழ்த்துகிறது நீவீர் வாழ்க வாழ்கவே!

மணமகன்: து. அருணாச்சலம்
மணமகள்: நா. பரணி
மணநாள்: 14.04.2014
மண இடம்: இளவரசி திருமண மண்டபம், சீலப்பந்தல், திருவண்ணாமலை
(இன்று எனது அலுவலக நண்பருக்கு திருமணம். அவருக்காக நானெழுதிய திருமண வாழ்த்துக் கவிதை இது..! கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?
உங்களனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!)
8 comments:
திருமண வாழ்த்துக் கவிதை அருமை...
நண்பருக்கும் தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
உங்கள் நண்பர் திரு அருணாச்சலம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! அருமையான கவிதை படைத்த உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
அன்பு தனபாலருக்கு...
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி..!
வாழ்த்திற்கு நன்றி இராஜேஸ்வரி...
எனது நண்பரை வாழ்த்தியமைக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்னமைக்கும் நன்றி நடன சபாபதி அவர்களே...
அருமை நண்பா...
நன்றி என் நட்பே..!
Post a Comment