அந்தரத்தில் பறக்கும் அரிசி விலை...
கண்ணாமூச்சி காட்டும் காய்கறி விலை...
ராக்கெட்டாய் சீறும்...
பெட்ரோல் டீசல் விலை...
பாலுக்கு நிகராய் தண்ணீரின் விலை...
அலைமோதும் கூட்டத்தால்
எப்போதும் நிரம்பி வழியும்
நியாய விலைக் கடை...
என இவை அத்தனையும்
சகித்துக் கொண்டு
வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே
போராட்டம் நடத்தும்
சராசரிக் குடிமகனாய் இருந்து தொலைப்பதை விட
முற்றிலுமாய் தொலைந்து போவதே
மேலென்று தோன்றுகிறது
குடும்பம் எனும் பந்தம் மட்டும் இல்லையென்றால்....
(அட போங்கடாங்க நீங்களும் உங்க மக்களாட்சியும்....)
***************
10 comments:
அனைத்து சராசரி மனிதர்களின்
மன நிலையை பதிவு செய்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இன்றைய சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.ஆனாலும் போராடி வெற்றிபெறுவதுதானே வாழ்க்கை.
நன்றி ரமணி அவர்களே...
சாகும் வரை போராடிக்கொண்டே இருக்கிறார்களே நம் அடித்தட்டு மக்கள்...
எவ்வளவு நாள்தான் போராடுவார்கள்...
நல்ல கவிதை..வாழ்த்துகள்
நன்றி சரவணரே...
என்னமோ போங்க...! ம்...
Ethanaip pattaalum pothathu immakkalukku!!
எங்கே போவது.. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்...
சொல்லுங்கள் தனபாலரே..!
நாமும் அந்த மக்களில் ஒருவராக இருக்கிறோம் அனானி...
அதுதான் வேதனையிலும் வேதனை...
Post a Comment