ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 4, 2014

ஆறுபோல் அறிவைப் பெருக்கி! - பிறந்தநாள் வாழ்த்து!
ஆறு -
இந்த சொல்லுக்கும்
எண்ணிக்கைக்கும்தான்
இப்பூவுலகில்
எத்துனைச் சிறப்பு!
எத்துனை செழிப்பு!

புவிதனில்
மனித நாகரிகத்தை
முதன் முதலில்
வளர்த்து விட்டது
ஆறு!

உலகில் உள்ள
உயிரினங்களில்
மனித இனத்துக்கு
உள்ள அறிவு
ஆறு!

உணவின் சுவைகளில்
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழன் பகுத்து
வைத்த சுவைகள்
ஆறு!

இப்படி
இன்று நான் ஆறை
ஆராயக் காரணம் உண்டு
என் இளைய மகவே
இன்றோடு உன் அகவை
ஆறு!

ஆறுபோல்
அறிவைப் பெருக்கி
அதன் வேகத்தைப் போல்
பொருளையீட்டி
புவியிலுள்ளோரெல்லாம்
உய்யும்படி வாழ்கவென் அகிலா!


(எனது இளைய மகனுக்கு ஆறாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )
12 comments:

ராஜி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மோகனன் said...

அன்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி ராஜி...

வே.நடனசபாபதி said...

உங்கள் இளைய மகனுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்! அவர் புகழ் 'அகிலம்' எல்லாம் சிறக்க எனது ஆசிகளும் கூட!

Rathnavel Natarajan said...

மிக்க மகிழ்ச்சி.
எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

சுபமூகா said...

அகிலனுக்கு அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

சுபமூகா

மோகனன் said...

தங்களின் வாழ்த்திற்கு நன்றி நடன சபாபதி அவர்களே...

மோகனன் said...

அன்பர் ரத்னவேல் நடராஜனுக்கு

தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள்...

மோகனன் said...

அன்பு சுபமூகா அவர்களுக்கு

தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

மோகனன் said...

நன்றி தனபாலரே...

Sangeetha DTERT said...

நற்சிந்தனை, நற்சொல், நற்செயலோடு பல்லாண்டு வாழ வாழ்த்தும் நண்பர்கள் தருண் மற்றும் கவின்.

அகிலன், பிறந்தநாள் இனிப்பு எங்கே?

மோகனன் said...

நட்பின் வாழ்த்துகளுக்கு அகிலன் சார்பில் நன்றிகள்...

நிச்சயம் இனிப்பு வீடு தேடி வரும்...