ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, September 9, 2014

நீ அளித்த பிச்சைதான்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதைஆதவனைப் போல் உதித்த என் மலரே..!
மேகத்தைப் போல் தவழ்ந்த என் மகவே..!
அம்புலியைப் போல் வளர்ந்த என் அழகே..!
விண்மீனினைப் போல் சிரித்த என் இதழே..!

முயலினைப் போல் குதித்த என் நிலவே
..!
மானினைப் போல் ஓடிய என் நதியே..!
யானையைப் போல் சிந்தித்த என் மதியே..!
சிங்கத்தைப் போல் ஒலித்த என் குரலே..!

நீ பிறந்து இன்றோடு ஆண்டுகள் ஒன்பது
..!
நீ அளித்த பிச்சைதான் நான் தந்தை என்பது..!
வாழ்வில் எமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது?
நீ பிறந்த இந்நாள்தான் என உலகம் சொல்வது..!

வாழ்க என் மகனே… வளர்க என் மகனே
..!
தாழ்க உன் மனமே... ஏழைக்கு தாழ்க உன் மனமே..!

(எங்கள் வீட்டு பட்டத்து இளவரசர் க. ஆதித்தனுக்கு இன்று ஒன்பதாவது பிறந்தநாள். அவருக்காக நானெழுதிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை)
4 comments:

வே.நடனசபாபதி said...

தங்களின் செல்வன் ஆதித்தனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ரூபன் said...

வணக்கம்

தங்களின் செல்வத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகனன் said...

நன்றி நடனசபாபதி அவர்களே....

மோகனன் said...

நன்றி ரூபன் அவர்களே....