ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 18, 2014

தாயின் மடி!காதைப் பிளக்கும்
பீரங்கி குண்டுச் சத்தம்…
ஒற்றையாய் விழுந்து
கற்றையாய் உயிர்களைக் கொல்லும்
கொத்துக் குண்டுகள்…
உயிரினை உரசிச் செல்லும்
எமகாதக தோட்டாக்கள்…
என அத்தனை எமன்களையும் தாண்டி
நாட்டைக் காக்க முன்னேறுகிறேன்
எதிரில்படும் எதிரிகளை
துவம்சம் செய்தபடி…
எங்கிருந்தோ வந்த குண்டு
என் இதயத்தைத் தாக்க
இரத்தத்தை இறைத்தபடி
தாய் மண்ணில் மடிகிறேன்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு...
அது தாய் மண் என்பதால் அல்ல
அது நான் பிறந்த தாயின் மடி என்பதால்..!

(தாய்மண்ணைக் காக்க போராடி வீரமரணமடைந்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்)
10 comments:

வே.நடனசபாபதி said...

சரியாய் சொன்னீர்கள். தாய் மண் எல்லாம் தாயின் மடிதான். அருமையான கவிதையாக்கம். வாழ்த்துக்கள்!

இன்றுதான் நினைத்தேன் ஏன் நீங்கள் ஒரு மாத காலமாக பதிவிடவில்லையென்று. உடனே பதிவு வந்துவிட்டது. இதுதான் தொலைவிலுணர்தலோ (Telepathy)?

ரூபன் said...

வணக்கம்

கவிதையின் கருத்தழகை கண்டு மகிழ்ந்தேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

தாய் மடியின் இதம் போல தாய் மண்ணும் தரும். கவிதை அருமை

மோகனன் said...

அன்பு நடனசபாபதி ஐயா அவர்களுக்கு...

தங்களின் அதீத அன்பிற்கு நன்றிகள்...

தொலை உணர்வில்தான் பதிவிலிட்டிருக்கிறேன்...

வேலைப்பளு காரணத்தால் இப்பக்கம் வரமுடியவில்லை...

மோகனன் said...

அன்பு ரூபனுக்கு

ஆயிரம் ரூபத்தில் நன்றிகள்...

மோகனன் said...

நன்றி ராஜி அவர்களே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தோழரே...

மோகனன் said...

நன்றி தோழரே...

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

மோ. கணேசன் said...

நன்றி ரத்னவேல்...