ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 29, 2014

வெட்கத்திற்கு விடுதலை தா..!

வெளிச்சத்தை
இருட்டிலடைத்து
வெட்கத்திற்கு
விடுதலை தா..!
உனை முழுதாய்
ரசிக்க வேண்டுமடி என்றேன்..!
முடியாது போடா என்றுவிட்டு
முகிலை இழுத்துப்
போர்த்தியபடி
மறைந்தே போனாள்
நிலா மகள்...
ஓ... இன்று அமாவாசை..!
6 comments:

மனசு said...

கவிதை நன்று நண்பா...

மோகனன் said...

நன்றி என் நட்பே...

வே.நடனசபாபதி said...

ஓ! அமாவாசையை இப்படிக்கூட கவிதையில் வடிக்கலாமோ? கவிதையும் அருமை.கற்பனையும் அருமை. வாழ்த்துக்கள்!

Anonymous said...

Super sir...
Juergen

மோகனன் said...

நன்றி நடனசபாபதி சார்...

மோகனன் said...

நன்றி Juergen