ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 2, 2015

என்ன செய்து கிழித்தாய்?


'தினமும்
நீ என்ன செய்து
கிழித்தாய்?'
என்று எனைப்பார்த்துக்
கேட்பவர்களுக்கு
நான் பதில் சொல்லத்
திணறும் போதெல்லாம்
எனை ஆபத்பாந்தவனாய்
காத்து நிற்பது
என்வீட்டு நாள்காட்டி
மட்டுமே!


(இனி உருப்படியாய் தினமும் ஏதேனும் செய்து கிழிக்க வேண்டும் என உள்ளுக்குள் புத்தாண்டு சபதம் எடுத்துக் கொண்டுவிட்டேன். நீங்க..?)
6 comments:

வே.நடனசபாபதி said...


ஆண்டின் இரண்டாம் நாளான இன்று நீங்கள் இன்னும் முதல் நாள் தாளை கிழிக்கவில்லையே! பின் எப்படி உங்கள் நாட்காட்டி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும்?
கற்பனையை இரசித்தேன். இந்த ஆண்டில் அதிக பதிவுகளை எதிர்பார்க்கிறேன் தங்களிடமிருந்து.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

மோகனன் said...

வணக்கம்

முதல் நாளில் கிழித்த தாள்தான் ஐயா இது...

நிச்சயம் அதிக பகிர்வுகள் இருக்கும்...

வாழ்த்தியமைக்கு நன்றிகள் பற்பல... உங்களுக்கும் எனது வாழ்த்துகள் உரித்ததாகட்டும்

-'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு நண்பா...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மோகனன் said...

நட்புக்கு நன்றி

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலரே...