ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, February 13, 2015

ஆஸ்திரேலியாவுல நடக்குதுடா..! - கானா பாடல்


ஆஸ்திரேலியாவுல நடக்குதுடா உலக கோப்பை கிரிக்கெட்டு
நியூசிலாந்து கூட சேர்ந்துகிட்டு நடத்துகின்ற கிரிக்கெட்டு
காஸ்ட்யூமிலே அச்சிலேறும் சொந்த நாட்டின் டி ஷர்ட்டு
வியூகம் பல வகுத்திடுவார் மேட்சில் ஜெயிக்க மெனக்கெட்டு

நாடு பதினாலு மோதும் வேர்ல்டு கப்பு கிரிக்கெட்டு
ஏழு நாடாய் பிரிந்துகொண்டு வரிந்து கட்டும் கிரிக்கெட்டு
வெற்றி வந்தால் ரசிகனுக்கு கிக்கு ஏத்தும் கிரிக்கெட்டு
தோல்வி கண்டால் துவண்டு விடும் மோசமான டை ஹார்ட்டு

தேசம் மீது நேசம் வைக்கும் ரசிகர்களின் கிரிக்கெட்டு
நேரில் பார்க்கும் ரசிகனுக்கு விருந்து வைக்கும் கிரிக்கெட்டு
வீசும் பந்து பேட்டில் பட்டால் சிக்சராகும் வான்தொட்டு
தவறவிட்டால் சிதறிடுமே ஸ்டம்பின் பைல்ஸும் தறிகெட்டு

சுழற்பந்து, சூப்பர் பந்து, வேகப்பந்து வீசுகின்ற கிரிக்கெட்டு
சிக்ஸ், ஃபோர், செஞ்சுரியென விளாச வைக்கும் கிரிக்கெட்டு
அடித்த பந்தை பிடித்துவிட்டால் கிடைத்திடுமே கைத்தட்டு
வந்த கேட்சை கோட்டை விட்டால் கிடைத்திடுமே செம திட்டு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாண்டு
நியூஸிலாந்து, ஆப்கான், இலங்கையென ஏ பிரிவில் ஸ்டண்டு
வெஸ்ட்இண்டீஸ், தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே, அயர்லாண்டு
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடும் பி பிரிவில் ஸ்டண்டு

உலக கோப்பை வெல்லத்தானே தோனி டீமும் ரிப்பீட்டு
தோனியோட தலைமையில போன முறை சூப்பர் ஹிட்டு
முதல் போட்டியில் கிலி கொடுப்போம் பாகிஸ்தானு அப்பீட்டு
மீண்டும் கோப்பை ஜெயிக்க வேணும் நண்பா நீயும் கைத்தட்டு!

(கவிதைகளை பதிவு செய்து கொண்டிருக்கிற நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். எனக்கும் இந்த கிரிக்கெட் ஜுரம் பற்றிக் கொண்டதால்... இம்முறை கவிதை அல்ல... கானாவாக பதிவிட்டிருக்கிறேன்... வழக்கம் போல் உங்கள் ஆதரவை நாடும்

உங்களன்பன்

மோகனன்)
6 comments:

ரூபன் said...

வணக்கம்
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி. நானும் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

கானா பாட்டிலும் கலக்கமுடியும் என நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! மீண்டும் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுவோம்

பரிவை சே.குமார் said...

சூப்பர் நண்பா... கலக்கிட்டே...

மோகனன் said...

நன்றி ரூபன்

மோகனன் said...

நன்றி நடனசபாபதி அவர்களே...

மோகனன் said...

நன்றி நண்பா...