ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 9, 2015

காணாத நோய்..! - 400வது கவிதைப் பதிவு


கதிர்க் காதலனை காணாததால்
பசலை நோய் கண்ட
நிலா காதலி
தினமும் உடல் மெலிந்து
தேய்வதுபோல்
எனைக் காணாத
நோய் கண்டு
தேய்ந்து போகிறாள்
என் கலாபக் காதலி!
"இது தொலைவு தரும் தொல்லையா?
நினைவு தரும் தொல்லையா?"
என்று வினா தொடுத்தாள்...
விடை உன்னுள்ளே இருக்குதடி
உடலிங்கு திரிந்தாலும்
என்னுயிர் உன்னுள்ளே உலவுவதால்
இந்நோய் கண்டிருக்கும் என்றேன்
"பேச்சிலும் சரி மூச்சிலும் சரி
கவி வீச்சிலும் சரி
நீ வில்லாதி வில்லன்
எனைக் கவர்ந்த கள்வன்"
என்று சிணுங்கினாள்...
அந்த நொடியிலிருந்து நான்
தேயத் துவங்கினேன்..!

(இது எனது 400-வது கவிதைப் பதிவு... எனை நேசிக்கும் கவிதைக்கும்... காதலை சுவாசிக்கும் உலக காதலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்..!

இந்த 400-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!

அன்புடன்
மோகனன்)
6 comments:

வே.நடனசபாபதி said...

//அந்த நொடியிலிருந்து நான்
தேயத் துவங்கினேன்..!//

அந்த நொடியில் தானா? அப்படியானால் உங்களின் காதலி சொன்னது போல் நீங்கள் ஒரு ‘வில்லாதி வில்லன்’ தான்.

400 ஆவது கவிதை பதிவுக்கு மன்மார்ந்த வாழ்த்துக்கள்! விரைவில் பதிவு பல்லாயிரத்தை தொடர விழைகின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

மோகனன் said...

நன்றி நடன சபாபதி அவர்களே...

மோகனன் said...

நன்றி தனபாலரே...

-'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

மோகனன் said...

நன்றி நண்பா...