ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 29, 2016

முடியாது..!"என்னால் முடியாது...
எதுவுமே முடியாது...
தொலைதூரத்தில்
இருக்கும் உன்னிடம்
அலைபேசியில்
ஆர்ப்பரிக்கும் அலையைப்போல்
பேசமுடிகின்ற என்னால்…
நேரில் சந்தித்தால்
ஒரு நொடிகூட
தைரியமாய் பேச முடியாது..!"
என அடிக்கடி சொல்லிக் ‘கொல்கிறாய்’
'வாய் பேச முடியாவிட்டாலென்ன?
உன்னிரு கண்கள் போதுமே
பேசுவதற்கு…' - என்றேன்
"அதுவும் முடியாது…
வெட்கத்தால்
கண்களை தாழ்த்திக் கொள்வேன்…
மொத்தத்தில்
உன்னை நேரில் பார்த்தால்
என்னால் எதுவுமே முடியாது…"
என்று சொன்னவளே…
குங்குமப்பூவைப் போல்
வெட்கப்பட மட்டும் உன்னால்
எப்படி முடிந்ததாம்..!


('முடியாது' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுத முடியுமா என்று என்னிடம் சவால் விட்டதற்காக எழுதப்பட்ட காதல் கவிதை இது... அட நீங்களும் கூட சவலான தலைப்பைத் தரலாம். கருப்பொருளும் உங்கள் விருப்பம் போல... 

மயிலிறகோடு நான் தயார்... நீங்கள்..? )
8 comments:

Nagendra Bharathi said...

அருமை

யூர்கன் க்ருகியர் said...

அதானே...... ஏன் முடியாது ?

யூர்கன் க்ருகியர் said...

இப்படி வெட்கப்பட்டுக்கிட்டு பேசாமலேயே இருந்தா ஒரு வகையில நல்லது ....சண்டையே வராது ... ...!!

Natu said...

Loveable lines is truly. Very nice. I like this.

மோகனன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நாகேந்திர பாரதி...

மோகனன் said...

யூர்கன் கிருகியகரே

முடியும் என்றால் முடியும்...

மோகனன் said...

ஊடல் இல்லா கூடல் ஏது நண்பா...

மோகனன் said...

வருகைக்கும் ரசனைக்கும் மகிழ்ச்சி நட்டு...