ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 29, 2016

உங்களைத் தின்பதற்கு..?


மழை பொய்த்ததால்
எங்கு பார்த்தாலும்
பெரும் வறட்சி!
நகரத்தில் மூச்சுவிடாமல்
இயங்கிக் கொண்டிருக்கின்றன
குளிரூட்டிகள்!
கிராமத்தில் நீரின்றி
வாய்பிளந்து கிடக்கிறது
நெடிய வயல்வெளி!
கடும் பயணத்தில்
கண் சிமிட்டி மறைகிறது
கானல் நீர்!
வெறிச்சோடிக் கிடக்கின்றன
வெள்ளாமை செய்த
பெருவயல்கள்!
பயிர்கள் தலை கருக
விவசாயிகள் தற்கொலைகளால்
விவசாயம் தூக்கிலேறுகிறது!
பண முதலைகளின்
வராக்கடன்களை
வாஞ்சையாய் நீக்கிய வங்கிகள்
பஞ்சத்திற்கு கடன்வாங்கி
நிலம் உழுதவனை
பழி தீர்த்துக் கொள்கின்றன!

சுற்றுச் சூழலை சீரழிக்கும்
தொழிற்சாலைகளுக்கு
ரத்தினக் கம்பளம் விரிக்கும் ஓநாய்களே!
ரியல் எஸ்டேட் முதலைகளின்
பின்னால் வாலாட்டித்
திரியும் வங்கிகளே..!
விவசாயத்தை மறந்து
தொழிற் புரட்சியில் வீழும்
கனவான்களே..?
சீனாவின் பிளாஸ்டிக் அரிசியை
நீங்கள் தின்னும் காலம்
வெகு விரைவில் இல்லை!
கறுப்பு பணத்தை மீட்கும் அக்கறையை
கண்ணீல் நீரோடும்
கழுத்தில் சுருக்குக் கயிறோடு இருக்கும்
விவசாயிகள் மீதும் காட்டுங்கள்!
எதிர்காலத்தில்
நீங்கள் தின்பதற்கு
அரிசி இருக்கிறதோ இல்லையோ
உங்களைத் தின்பதற்கு
இந்த மண் கூட இருக்காது
சிமெண்ட் தரைகளாகத்தான் இருக்கும்!
2 comments:

gowthami said...

விவசாயிகளின்
வேதனைமட்டுமின்றிநம்எதிர்காலம்என்றகேள்விக்குறியும்கவிதைநடையி்ல்அருமை

மோகனன் said...

புரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு எப்போது புரியுமோ..? வருகைக்கும் கருத்திற்கும் வந்தனங்கள்!