உங்கள் ஆட்சியில்
ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள்
நாட்டை சுரண்டிய அமைச்சுகள்
டாஸ்மாக் விற்பனைகள்
என பல்வேறு
விஷயங்களுக்காக
உங்களுக்கு எதிராய்
தலைநிமிர்ந்து
எழுதிய எனது பேனா
நீங்கள் இம்மண்ணிலிருந்து
மறைந்து போன போது
தலைகுனிந்து
கண்ணீர் விட்டதை
பகிரங்கமாய் ஒப்புக்கொள்கிறேன்!
நீங்கள் கட்டிக்காத்த தமிழகம்
இனி என்னாகுமோ
என்ற கவலையில்
என் பேனா
விழிப்போடு இருக்கிறது!
வல்லூறுகளும்
பிணம் தின்னி கழுகுகளும்
என் தமிழ்நாட்டை
கூறுபோட்டிடுமோ
என்ற கவலையில்
என் பேனாவை
முன்னை விட முனைப்போடு
கூர்தீட்டிக் கொள்கிறேன்!
சத்தியத்தின் பக்கத்தில்
சத்தியமாய்
நீங்கள் இருப்பீர்
என்ற நம்பிக்கையில்..!
ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள்
நாட்டை சுரண்டிய அமைச்சுகள்
டாஸ்மாக் விற்பனைகள்
என பல்வேறு
விஷயங்களுக்காக
உங்களுக்கு எதிராய்
தலைநிமிர்ந்து
எழுதிய எனது பேனா
நீங்கள் இம்மண்ணிலிருந்து
மறைந்து போன போது
தலைகுனிந்து
கண்ணீர் விட்டதை
பகிரங்கமாய் ஒப்புக்கொள்கிறேன்!
நீங்கள் கட்டிக்காத்த தமிழகம்
இனி என்னாகுமோ
என்ற கவலையில்
என் பேனா
விழிப்போடு இருக்கிறது!
வல்லூறுகளும்
பிணம் தின்னி கழுகுகளும்
என் தமிழ்நாட்டை
கூறுபோட்டிடுமோ
என்ற கவலையில்
என் பேனாவை
முன்னை விட முனைப்போடு
கூர்தீட்டிக் கொள்கிறேன்!
சத்தியத்தின் பக்கத்தில்
சத்தியமாய்
நீங்கள் இருப்பீர்
என்ற நம்பிக்கையில்..!
8 comments:
கூர் தீட்டிய எழுத்து்கள்...அருமை தோழர்
கவி நன்று
அன்பு தோழமை கௌதமிக்கு...
கூர்தீட்ட வேண்டியது நம் அறிவு, எழுத்துகளை மட்டுமின்றி நம்முடைய ஆட்சியாளர்களையும்தான் தோழமையே...
வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழர் பிரேம்...
கணேசன்,
சிறுபிள்ளமையிலிருந்து வெளிவந்த பரிபக்குவ மனிதனாய் உங்கள் எழுத்தைக் காண்கிறேன், உங்கள் பணிக்கு ஏற்ற பொறுப்புணர்வும் இதில் மிளிர்கிறது, நன்று கணேசன். வளர்க வாழ்க
நட்புடன்
க.சு. சங்கீதா
சத்தியத்தின் பக்கத்தில்
சத்தியமாய் .....இனி மேலா ?
அன்பான சங்கீதா அவர்களுக்கு...
தங்களின் அன்பிற்கும், கூர்ந்த பார்வைக்கும் பெருமகிழ்ச்சி...
சிறுபிள்ளையாக இருந்துதான் பக்குவமடைந்த மனிதனாக மாற முடியும். காலம் நம்மை அப்படி மாற்றிவிடுகிறது.
மாற்றத்தை படைக்க வேண்டும்... படைப்பேன் நிச்சயம்1
என்ன பகவான்ஜு...
சத்தியமாய் நம்பிக்கை இல்லைதானே... சத்தியமாய் இருந்தால்தானே நம்புவதற்கு...
Post a Comment