ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 28, 2011

சுவாசிக்க விருப்பமில்லை..!



உன் கூந்தல் வாசத்தை
சுவாசித்த பிறகு
காற்றைச் சுவாசிக்க
விருப்பமில்லை..!
ஏனெனில்
என் அணுக்கள்
அத்தனையும் உன்னை
சுவாசித்துக் கொண்டிருக்கிறதே..!




Thursday, January 27, 2011

பூந்தென்றல் உறங்கி விட்டதா..?

எப்போதும்
உன்னைச் சுற்றியே
வீசிக் கொண்டிருக்கும்
பூந்தென்றல் இன்று
உறங்கி விட்டதா..?
எப்போதும்
புன்னகை மட்டுமே
பூக்கின்ற உன்
அழகு முகத்தில்
இப்போது வியர்வைத் துளிகள்
பூத்திருக்கின்றனவே..!




Tuesday, January 25, 2011

உன்னோடு என் நினைவுகள்..! - 250 வது கவிதைப் பதிவு


பத்து மாதங்கள் சுமந்து
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பத்து வினாடிகள்
மனதில் சுமந்து 
பெற்றெடுப்பது கூட குழந்தைதான்..!

என் கவிதைகளைத்தான்
குழந்தை என்று சொல்கிறேன்..!
அதிலும் அக்குழந்தை...
எனக்குப் பிறந்த
குழந்தை என்பைதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான்
சொல்(ல விரும்பு)கிறேன்..!

அதெப்படியடா
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
என்று நீ கேட்கலாம்...

ஆணும் பெண்ணும் 
உடலளவில் சேர்வதால்
கண் நிறைந்த குழந்தை பிறக்கிறது..!
உன்னோடு என் நினைவுகள் சேர்வதால்
கவிதையெனும் குழந்தை பிறக்குதடி..!

கண் நிறைந்த குழந்தைக்கு
காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியவரும்..!

என் கவிக்குழந்தைக்கோ...
தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு
தாய் நீ என்று தெரிய வரும்..!

கருவைச் சுமப்பதால் நீ தாயாகிறாய்...
உன்னையும் உன் உணர்வுகளையும்
நம் கவிக்குழந்தைகளையும்
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!

(இது என்னுடைய 250-வது கவி(க்குழந்)தைப் பதிவு... இதனை எனது அன்பிற்கினியவளுக்கும், இவ்வுலகில் அன்பைச் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்..!

தொடரும் உங்களது மேலான ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்)




Thursday, January 20, 2011

நீலவானம் போல..!


அமாவாசை இரவில்
நிலவை இழந்து தவிக்கும்
நீலவானம் போல…
நீ எனை சந்திக்க வராத
நாட்களில்
நானும் தவித்துப்
போகிறேன் அன்பே!



Friday, January 14, 2011

தையலெனும் தைமகள் வருகிறாள்..!


மதி நிறை மார்கழித் திங்கள்
மறையத் துவங்க...
தையலெனும் தைமகள்
தலை நிமிர்ந்து வருகிறாள்...
தமிழர்களின் உளம் மகிழ வருகிறாள்...

தமிழர்த் திருநாள் போற்ற வருகிறாள்..!

வரவேண்டும்...
வர(ம்)வேண்டும் தமிழ்ப்பெண்ணே
உமை வேண்டி பாடுகிறேன்
தமிழ்ப்பண்ணே..!

நூறு கிலோ அரிசி மூட்டையைச்

சுமப்பவனால்
நல்ல அரிசி ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிட வழியில்லை..!
ஒரு கிலோ நல்லரிசி வாங்கி
உண்பவனால்
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமக்க வக்கில்லை..!

பட்டாடை நெய்கின்ற நெசவாளரால்

சிறுபட்டாடை வாங்கியணிய வசதியில்லை
பட்டு வாங்கும் பணக்காரர்களுக்கு
நெசவாளர் நலனறியப் போவதில்லை..!

போதுமிந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

எல்லோரும் எல்லாமும் பெற
வறியோர்கள் உடையோர்கள் எனும்
ஏற்றத் தாழ்வு மறைய... 
தமிழான தைமகளே தயை புரி..!

ஈழத்து மண்ணில் எம்மக்கள்

இருக்கின்ற இரும்புச்சிறையினை
இருக்குமிடமில்லாமல் செய்..!
உலகத்து தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை
இப்புவிதனில் மலரச் செய்..!

அனைவரின் நெஞ்சிலும்

அன்பை விதைத்து...
தீவிரவாதத்தை தீயிட்டழித்து
உயிர் வதையினை உருத்தெரியமலழித்து
உலகெங்கும் அமைதியை பரவச் செய்..!

வியர்வையை உடலில் வரைபடமாக்கி

உழைக்கின்ற பாட்டாளி வர்க்கமும்
வியர்வையை நிலத்தில் நெல்மணியாக்கும்
உயர்ந்த என்னுழவர் வர்க்கமும்
வாழ்வாங்கு வாழ தைமகளே வழி செய்..!

(என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களுக்கு, அடியவனின் இனிய திமழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

என்றென்றும் அன்பு
'டன்'


உங்கள்
மோகனன்)




Wednesday, January 12, 2011

அரசி நீ எனில்..!


பூவிற்க்கெல்லாம்
அரசி நீ எனில்...
வண்டிற்கெல்லாம்
அரசன் நான்..!
மரங்களுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
மண்ணுக்கெல்லாம்
அரசன் நான்..!
பூந்தோட்டத்திற்கெல்லாம்
அரசி நீ எனில்...
தென்றலுக்கெல்லாம்
அரசன் நான்..!
கடலுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
மழைக்கெல்லாம்
அரசன் நான்..!
கவிதைக்கெல்லாம்
அரசி நீ எனில்...
கவிஞர்களுக்கெல்லாம்
அரசன் நான்..!
காதலுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
உன் காதலுக்கெல்லாம்
அரசனல்ல, அடிமை நான்..!