நான்காண்டு காலம்
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்த் திரிந்து
ஒன்றாய் மகிழ்ந்து
ஒன்றாய்க் குலாவிய நட்பினை
நிஜத்தில் பின் தொடர்ந்தேன்...
பள்ளிக்காலம் முடிந்த பின்
எங்களைப் பிரிக்க முடியாமல்
பிரித்தது காலம்…
எனை தனிப் பித்தனாக்கியது
அக்கோலம்?
எத்திசையில் இருப்பினும்
நட்பின் வாசம் தேடி
நாயாய் நான்
பல்லாண்டுகளாய் அலைந்த போது
இன்றுதான் அவனை
நிழலாய் பின்தொடரும்
வாய்ப்பு கிடைத்தது
முகநூலிலும்
சிட்டுக்குருவியின் கீச்சலிலும்…
இந்நாளை மறவேன் இனி…
அதற்கு காரணம் இரண்டு!
நான் தொலைத்த நான்காண்டு நட்பு
பல்லாண்டுகளுக்குப் பிறகு
இன்று ஐந்தாமாண்டில்
அடியெடுத்து வைப்பது ஒன்று...
என் கவிக்குடிலுக்கு இன்றோடு
அகவை ஐந்தென்பது மற்றொன்று..!
10 comments:
இரட்டித்த இம் மகிழ்வு என்றென்றும் தொடர்ந்திட வாழ்த்துக்கள் சகோ !
அருமை...............!
உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...
இரட்டிப்புச் சந்தோஷம்....
வாழ்த்துக்கள் நண்பா...
நன்றி அம்பளடியாள்...
நன்றி தனபாலரே..
நன்றி நண்பா...
vaalththukkal
இந்த ஐந்து விரைவில் ஐநூறு ஆக வாழ்த்துக்கள்!
நன்றி சரவணன்
நன்றி சபாபதி அவர்களே...
Post a Comment