பல்லாண்டுகளுக்கு முன்
தாயின் கருவறையில்
ஆலம் வித்தானாய்...
உன் தந்தையின்
மன அறையில்
சிப்பிக்குள் முத்தானாய்..!
ஈன்றெடுத்த போது
இழைந்தோடும்
இசையானாய்..!
வளரும் போது
வருடி விடும்
தென்றலானாய்..!
பூச்சூடும் பருவத்தில்
மணம் வீசும்
பூஞ்சோலையானாய்..!
கல்லூரி பருவத்தில்
வானம் சுற்றும்
வானம்பாடியானாய்..!
விதியின் விளையாட்டில்
விளையாட்டு
பொம்மையானாய்..!
காலம் மாறிற்று
காட்சிகளும் மாறிற்று...
பொம்மை பெண்மையானது
உண்மை வண்மையானது
சுதந்திர உலகம் இனி உனக்கானது..!
வலியில் பிறப்பது வாழ்க்கை
வலிந்து விரட்டு வலியை
வசந்தம் இனி பின்பற்றும் உன் வழியை..!
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் நிலவுக்கு
முதல் பிறந்தநாள் இது..!
இன்னாள் போல் இனி என்னாளும்
வாழ்க நீயும் நலமோடு
வாழ்த்துகிறேன் நானும் மனதோடு!
(என் அன்புக்குரிய தோழி பொன். விமலாவிற்கு இன்று பிறந்தநாள்... அவருக்காக நான் எழுதிய கவிதை இது...
உலகின் எல்லா மகிழ்ச்சிகளும் உன் காலடியில் விழட்டும் விமலா...
என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!)
6 comments:
நல்ல பிறந்த நாள் கவிதை. அருமை வாழ்த்துக்கள்.
வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்...
தோழிக்கு இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
தங்களின் கவிதைக்கு வாழ்த்துக்கள்! கவிதை பிறக்கக் காரணமாக இருக்கும் தங்களின் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தியமைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி...
வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சபாபதி அவர்களே...
Post a Comment