இரவினைத் தூங்க வைத்து
இமைகளை விழிக்க வைத்தாய்!
கனவினைத் தூங்க வைத்து
கண்களை திறக்க வைத்தாய்!
நிலவினை தூங்க வைத்து
உன் நிலா முகம் காண வைத்தாய்!
நட்சத்திரங்களை தூங்க வைத்து
நமட்டுச் சிரிப்பை சிதற வைத்தாய்!
கருமேகங்களை தூங்க வைத்து
கவிதையை கிறுக்க வைத்தாய்!
என் துன்பத்தை தூங்க வைத்து
இன்பத்தை நுகர வைத்தாய்!
இத்தனையும் தூங்க வைத்தவளே
எப்போது எனை உன்
இதயத்தில் தூங்க வைப்பாய்?
இமைகளை விழிக்க வைத்தாய்!
கனவினைத் தூங்க வைத்து
கண்களை திறக்க வைத்தாய்!
நிலவினை தூங்க வைத்து
உன் நிலா முகம் காண வைத்தாய்!
நட்சத்திரங்களை தூங்க வைத்து
நமட்டுச் சிரிப்பை சிதற வைத்தாய்!
கருமேகங்களை தூங்க வைத்து
கவிதையை கிறுக்க வைத்தாய்!
என் துன்பத்தை தூங்க வைத்து
இன்பத்தை நுகர வைத்தாய்!
இத்தனையும் தூங்க வைத்தவளே
எப்போது எனை உன்
இதயத்தில் தூங்க வைப்பாய்?
14 comments:
வணக்கம்
கவிதையின் வரிகள் அழகு கவலை வேண்டாம் நல்லது நடக்கட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
நல்ல காதல் கவிதை. காதல் ரசம் கொட்டுகிறது.
அதானே...?
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
கவிதை அருமை...
வாழ்த்துக்கள் நண்பா.
உங்களை அவரது இதயத்தில் தூங்க வைத்துவிட்டால் நாங்கள் உங்கள் கவிதைக்கு ஏங்கவேண்டியதுதான்!
கவிதையை இரசித்தேன்
நன்றி நடனசபாபதி அவர்களே...
எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பேன்... கவலை வேண்டாம்... படிக்க உங்களுக்கு மனசு இருக்க வேண்டும்...
அன்னமெனத் துயிலும்
அழகு மயிலுக்கு
உங்கள் எழுத்துகள் ஒவ்வொன்றும்
வருடும் மெல்லிறகுகள்
உங்கள் கருத்து மயிலிறகு போல் வருடுகிறதே தோழி...
இதற்கு மேல் வேறென்ன சொல்ல...
தங்களின் பதம் இங்கு பட்டதற்கு எனது மகிழ்ச்சி கலந்த வந்தனங்கள்...
இனிய தாலாட்டு !
இனிமை
ரசனைக்கும், இணைப்பிற்கும் இனிக்கும் நன்றிகள் பல ஸ்வராணி...
கவியாழி கண்ணதாசனாருக்கு...
தங்களின் ரசிப்பிற்கும், இணைதலுக்கும் இனிய நன்றிகள் பல...
Post a Comment