என் உள்ளத்தை
கொள்ளையடித்த
கொள்ளைக்காரி என்றுதான்
உன்னை நினைத்திருந்தேன்!
என் உறக்கத்தை
கொலை செய்தபோதுதான்
நீ ஒரு கொலைகாரி
என்பதை கண்டுகொண்டேன்!
என்னை கொள்ளையடித்தது
மட்டுமின்றி
எனக்காக கொலையும்
செய்த காரணத்தால்
என் இதயச் சிறையில்
உனக்கு ஆயுள் தண்டனை
விதிக்கிறேனடி!
10 comments:
இது தான் சரியான தண்டனை...
வாழ்த்துக்கள்...
நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமே...
விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html
நன்றி...
தண்டனைக்கு வாழ்த்து..! ம்ம்ம் ஏத்துக்க வேண்டியதுதான்...
நான் அந்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை தனபாலரே... போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் எழுதியவனல்ல நான்...
அன்பிற்கு நன்றி... எதற்கும் தங்கள் அழைப்பிற்காக முயற்சிக்கிறேன்...
சரியான தண்டனைதான்
அனுபவிக்கட்டும்
வணக்கம்
இப்படியான தண்டனையை வாழ்க்கையில் மறக்கமாட்டால்... கவிதை நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு குற்றங்களுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை அல்லவா தரவேண்டும்?
நன்றி ரமணி அவர்களே...
நன்றி ரூபன்...
திருட்டு, கொள்ளைக்கெல்லாம் ஆயுள் தண்டனை விதிக்க மாட்டார்கள் தலைவரே...
இருப்பினும் நீர் நாட்டாமை என்பதால்... தீர்ப்பை மாத்தி சொல்லும்...
நன்றி நடனசபாபதி அவர்களே
Post a Comment