நடுங்கும் பகல்
பொழியும் மழை
சோம்பல் மேகங்கள்
ஆம்பல் சூரியன்
நடுக்கத்தில் பறவைகள்
ஒடுக்கத்தில் அணிற்பிள்ளைகள்
தங்களுக்குள் தலை புதைக்கும்
நாய்க்குட்டிகள்
கதகதப்பைத் தேடும்
பூனைக்குட்டிகள்
மழையில் முகம் கழுவும்
சாலையோர பூஞ்செடிகள்
தார்ச்சாலையில்
நெளியும் வானவில்கள்
நடைபாதை ஓரத்தில் திடீரென
முளைக்கும் கண்டத் திட்டுகள்
மழை நீரில் கப்பலாகும்
இலைச் சருகுகள்!
என இந்த மாரிக்காலத்தில்
எல்லாவற்றையும்
ரசித்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று மோதும்
குளிர் தென்றல் காற்றில்
எனை நான் மறப்பது போல்
உன் வாசம் வீசும்போதும்
என்னை நான் மறந்து போகிறேன் அன்பே!
16 comments:
நடைபாதையில் திடீரென
முளைக்கும் கண்டத் திட்டுகள்
இந்த நையாண்டி தான் உங்கள் முத்திரை
இயற்கையோடு பயணிக்கும் போதே
இறுதியில் அதென்ன ம் ம்
அன்பு வந்து
அத்தனையையும் கலைத்து விடுகிறது
நன்று நண்பா
எத்தனை இருந்தாலும்...
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
அன்பு கலைக்காது... அது 'கலை' காது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்...
அன்பே அனைத்திற்கும் ஆதாரம் அல்லவா... அதான்...
அது நடைபாதை ஓரத்தில் என எழுதியிருக்க வேண்டும். இருங்க மாத்திடறேன்...
நன்றி நண்பி...
ரசனைக்கு நன்றி தனபாலரே...
நாங்களும் உங்கள் கவிதைகளைப் படிக்கும்போது எங்களை மறந்துவிடுகிறோம்!
அருமை.
வாழ்த்துகள்.
அருமை நண்பா...
தலைவரே... என்னை மறந்துடாதீங்க...
அன்பிற்கு நன்றி...
நன்றி ரத்னவேல் அவர்களே...
நன்றி நட்பே...
நல்ல கவிதை
மழையின் வசீகரத்தை மனம்குழைந்து ரசிக்கும் வேளை மண்டையில் கொட்டியது போலும் உமது காதல். இன்னும் சற்று நனைய விட்டிருக்கலாம்
நன்றி காஸ்ட்ரோ துரை...
மழைப் பொழிவு கூட ஒரு காதல்தான் தோழரே...
பூமியின் மேல் உள்ள காதலால் வானமகள் பொழியும் அன்பே மழை...
Post a Comment