தன்னுயிர் தழைக்க
தன்னுடலை உருக்கி
உமிழ்நீரைப் பெருக்கி
இல்லத்தைக் கட்டும்
சிலந்தியின் வலையைப் போல
உன்னுடலை வருத்தி
உன்னன்பைப் பெருக்கி
உனக்காக வாழாமல்
எனக்காக எல்லாவற்றையும் செய்து
எப்போதும் உன்னையே
நினைக்க வைத்திருக்கும்
உன்னுடைய அன்பு கூட
ஒருவித சிலந்தி வலைதானடி..!
10 comments:
வணக்கம்
சிலந்திவலையை காதலியின் அன்புக்கு ஒப்பிட்ட விதம் அருமை வாழ்த்துக்கள் நண்பரே....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிலந்தி வலை விரிப்பது உணவுக்காக! உங்களவர் அன்போ உறவுக்காக! அந்த வலையும் அன்பு வலையும் ஒன்றல்ல என்றாலும் உவமையை இரசித்தேன்!
அன்பின் இழையை வலையில் இணைத்து நெய்யும் நண்பருக்கு இனிய பாராட்டு.
எனக்கு எங்கோ படித்த வரிகள் ஞாபத்திற்கு வருகின்றன-
ஒற்றைக் கோலிலே வலை பின்னும் சிலந்தி நான்
சிக்கிக் கொள்ளும் ஈயும் நான்.
அன்பிற்கு நன்றி ரூபன்... அருமை ரசனைக்கும் எனது நன்றிகள்...
அன்பு சபாபதி அவர்களே...
உணவு என்பது உயிர்வாழ...
என்னவள் வாழ்வதே அவள் வாழ அல்ல நான் வாழ என்பதை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்...
தங்களின் விமர்சனத்திற்கு நன்றி...
ம்ம்ம்...
நீங்கள் குறிப்பிட்ட கவிதையும் அருமைதான்...
கவிதையை ரசித்தமைக்கு நன்றி...
இந்த வலை மேலும் தொடரட்டும்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலரே...
அருமை.
நன்றி.
நன்றி நடராஜன் அவர்களே...
Post a Comment