ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 30, 2013

உண்டியல்


நீ என்னை சந்தித்துவிட்டு
செல்லும் ஒவ்வொரு முறையும்
உன் நினைவுச் சேகரங்களை
என் மனமெனும் உண்டியலுக்குள்
சேர்த்து வைக்கிறேன்...
என்றேனும் ஒருநாள்
அந்த உண்டியலை
திறந்து பார்க்க மாட்டாயா
என்ற நப்பாசையில்..!

(உண்டியல் என்ற பெயரில் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வாசகரின் வேண்டுகோள். அதில் காதலைக் கொண்டுவரமுடியுமா என்று சவால் விட்டார். முயற்சித்துப் பார்ப்போமே என்று கிறுக்கியதுதான் இது...

இதுபோன்ற சிக்கலான தலைப்பினை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்... அதில் என்ன கருப்பொருள் வரவேண்டும் என்ற சவாலுக்கு நான் தயார்... நீங்கள்..?)




18 comments:

Anonymous said...

வணக்கம்
உண்டியலில் காதல் பற்றி கூறிய விதம் நன்று..வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

உண்டியல் கருத்தும் கவிதையும் அருமை. நீங்கள் கேட்டதால் நான் தருகிறேன் தலைப்பு. ‘சிக்கல்’ என்பதே அது. காத்திருக்கிறேன் கவிதையைப் படிக்க!

Unknown said...

உண்டியலிலும் இதய உள்ளிருப்புப் போராட்டம் தொடர்வது தெரிகிறது.

கவிதை நன்று நண்பரே.

மாதேவி said...

அட! வாழ்த்துகள். தொடருங்கள்.

மோகனன் said...

நன்றி ரூபன்.... தங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

மோகனன் said...

வாங்க சபாபதி அவர்களே...

சிக்கல் எனும் தலைப்பு சரிதான்... அதன் கருப்பொருள் எதுவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லையே ஏன்?

எழுதுகிறேன் சிக்கலின்றி சிக்கலை...

மோகனன் said...

இருப்புப் போராட்டத்திற்கு வித்திட்டது ஒரு கவிதை...

ரசித்தமைக்கு நன்றி சங்கீதா...

மோகனன் said...

அட வாங்க மாதேவி...

அத்தி பூத்தாற் போன்ற வரவு உங்களது...

வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... ஆசை நிறைவேறட்டும்....

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...

காதலிப்பதால் ஏற்படும் சிக்கல் தான் கருப்பொருள்!

மதுரை சரவணன் said...

உனக்கான உண்டியலை உடைக்க போகிறவள் யார்...? உன் உண்டியல் உடைந்து விட்டதா?
கவிதை சூப்பர்.

மோகனன் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலரே...

தங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!

மோகனன் said...

அப்ப சரி... சிக்கலில் காதலா.. காதலால் சிக்கலா?

ஒண்ணுமே தோணமாட்டேங்குது சபாபதி அவர்களே...

தெரியாம வார்த்தையை விட்டுட்டேனோ..?

மோகனன் said...

இந்த மதுரை குசும்புதான வேணாங்கறது...

உடைக்கல... உடைக்கல...

வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது நன்றிகள் சரவணரே...

மகேந்திரன் said...

புடம் போட்டு வைத்த உணர்வுகள்...
பொங்கிப் புணர்ந்திடும் காலம் வரும்...
அழகிய கவிதை நண்பரே...

மோகனன் said...

அன்பு மகேந்திரன் அவர்களுக்கு...

தங்களின் இணைப்பிற்கும் ரசிப்பிற்கும் எனது நன்றிகள்...

Anonymous said...

Unkal kavithai sirappaga irunthathu..athe samayam ungalathu savalayum yatru kolkiren..

Enakaka "NEER ODAIKAL"endra thalaipil "NATPAI"karuvaga kondu oru kavithaiyai padaiyunkal...

ithu saval alla, enathu viruppam...

Vijay Senthil

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி விஜய் செந்தில்...

கண்டீப்பாக எழுதுகிறேன் தோழரே...