ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 13, 2013

முத்தாரக் கவியெடுத்து..! - பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை



முத்துத் தமிழெடுத்து முத்தாரக் கவியெடுத்து
உன் மாமன் வருகிறேன் பிறந்தநாள் வாழ்த்துப் பாட
குயிலாய் குரல் கொடுக்கும் குழவியாயிருந்த நீ
இன்றோடோராண்டை எட்டுகிறாய் மருமகனே- உனக்காக
ந்திர லோக சபையை நான் கூட்டட்டுமா..!
மாமன் முதுகிலேற்றி உலகைக் காட்டட்டுமா..!
ங்க நண்பனுக்கு தப்பாமல் நீ பிறந்தாய்..!
தங்க மகனென்று போற்றிடவே நீ வளர்வாய்..!
ன்று மட்டுமன்று என்னாளும் ஊருலகம் உனைப்
போற்றும்படி வாழ்வாங்கு வாழ்கவென் மருமகவே!
*********************************************************************************
 (எனது ஆருயிர் நண்பனும், எனக்கு தோள் கொடுக்கும் தோழனுமான வ.நவநீதகிருஷ்ணனின் மகனாகிய எனது மருமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அவனுக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை. பிறந்தநாள் கொண்டாடும் எனது மருமகனின் பெயர் தெரியவிரும்பினால் கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... குதுகலமாய் உங்கள் நாவில் உலா வருவான் என் மருமகன்...)
************************************************************************************************** 

நானெழுதிய புதிய சிறுகதை
: என்னப் பெத்தவரு




8 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை நண்பா...
என்னைப் பெத்தவரு என்னைக் கலங்க வைத்துவிட்டது.... நேற்றே படித்தேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை அருமை...

வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...

செல்வன் முகுந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நற்கவிதை படைத்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

மோகனன் said...

அன்பு குமரனுக்கு...

உமது வாழ்த்து கண்டு மகிழ்கிறேன்...

வசிஷ்டர் கையால் குட்டு வாங்கிய பெருமை எனக்கு... கதை பற்றிய உமது கருத்துக்கு சொல்கிறேன்...

அது கதையல்ல... என் தந்தையார் எனக்கு செய்தது...

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

எனது மருமகனை வாழ்த்திய தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ஐயா...

உமைப் போன்ற பெரியோர்களின் ஆசி அவனுக்கு தேவை...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

மோகனன் said...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி கவிஞர் பெருமானே...

தங்களுக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...