ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, January 31, 2014

போங்கடாங்க நீங்களும் உங்க..?


அரசின் கையில்
இருக்க வேண்டிய
கல்வியும் மருத்துவமும்
இன்று தனியார்களின் பிடியில்…
தனியார்களிடம் கூட
இருக்கக்கூடாத
மதுவும் குடிநீரும்
இன்று அரசின் கையில்…
இதற்கு பெயர்தான்
குடிமக்கள் விரும்பும் ஆட்சியாம்..?
போங்கடாங்க நீங்களும்
உங்க ‘குடி’ஆட்சியும்?
********************************
நானெழுதிய புதிய சிறுகதை: கல்லூத்துப்பட்டி ஆலமரம்!





Wednesday, January 29, 2014

நான்... அவன்..!


நான் நிஜம் எனில்
அவன் நிழல்!
அவன் நிஜம் எனில்
நான் நிழல்!
எண்ணம் நான் எனில்
செயல் அவன்!
எண்ணம் அவன் எனில்
செயல் நான்!
இதற்குப் பெயர்தான் நட்பு!

(என்னையும், என் வாழ்வின் மிகமுக்கியமான தருணங்களையும் வழிநடத்திச் செல்வதில் எனக்கு உறுதுணையாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற, இருக்கப் போகிற எனது நட்புகளுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து நட்புகளுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)




Thursday, January 23, 2014

பேரழகின் வள்ளல்!


நடையழகில் காட்டுகிறாய்
மானினத் துள்ளல்!
இடையழகில் பூட்டுகிறாய்
மயக்குறு விள்ளல்!
இதழழகில் காட்டுகிறாய்
முல்லைப்பூ எள்ளல்!
விழியழகில் நீட்டுகிறாய்
கயல்களின் அள்ளல்!
மார்பழகில் காட்டுகிறாய்
மனம்மயக்கும் கள்ளல்!
மதியழகில் தீட்டுகிறாய்
அசாத்திய மள்ளல்!

சிகையழகில் காட்டுகிறாய்
மேகத்தின் மேடுபள்ளல்
நகையழகில் கூட்டுகிறாய்
நறுந்தேனின் நள்ளல்!


என்னிதயத்தில் இட்டுவிட்டாய்
மாபெரும் தொள்ளல்!
எப்போது வந்து நீக்குவாய்
மனதிலுள்ள பொள்ளல்!
மயிலிறகென வருடுகிறாய்
பேச்சினில் சுள்ளல்!
சிரித்து எனை சிக்கவைத்தாய்
மையலெனும் சள்ளல்!
உன்னிடம் ஈர்த்து விட்டாய்
காதல்தனை கொள்ளல்!
கனவுகளில் ஆழ்த்திவிட்டாய்
நினைவுகள் உள்ளல்!
பெண்ணினத்தை நாண வைத்தாய்
நீயே பேரழகின் வள்ளல்!

(நண்பர் சாமுராய் கேட்டுக்கொண்டதற்காக 'வள்ளல்' எனும் தலைப்பில் இக்காதல் கவிதை. உங்களுக்கு இங்குள்ள சொற்களுக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கும்தான்... எதுக்கும் அருஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்...)

(விள்ளல் = கட்டித் தழுவல், எள்ளல் = சிரிப்பு, 
கயல் = மீன், மதி = அறிவு, மள்ளல் = வலிமை, 
கள்ளல் = திருடுதல், சிகை = கூந்தல், பள்ளல் = பள்ளம்,
நள்ளல் = உறவு கொள்ளுதல், தொள்ளல் = துளை,
பொள்ளல் = வடு, சுள்ளல் = வலிமை, மையல் = காதல்,
சள்ளல் = சேறு, சிக்கல், உள்ளல் = நினைத்தல், மகிழ்தல்)

---------------------------------------------------------

Blogger சாமுராய் said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா :)
நீங்க தலைப்புக் குடுத்தா கவிதை குடுக்கிறதுல கர்ணனாமே? எனக்கு "வள்ளல்" எண்டுற தலைப்பில ஒரு (காதல்) கவிதை?
வாழ்த்துக்கள் :)
January 21, 2014 at 2:42 AM
 Delete




Monday, January 20, 2014

உலகில் சிறந்த பூ!


'உன்னை நான் முதன்முதலில்
சந்தித்தபோது
என் தலையில் பூ கூட
வைக்கவில்லையடா'
என்று நீ அடிக்கடி
வேதனையோடு கூறுவதை
நிறுத்திக்கொள் பெண்ணே…
வறுமையின் காரணமாய்
அன்று நீ பூச்சூடாத போதும்
உன் அழகிய அதரங்களில்
என்றும் வறியாத சிரிப்’பு’ இருந்தது…
அதைவிட சிறந்த பூ
இந்த உலகில் எதுவுமில்லை..! 




Saturday, January 11, 2014

பொங்கலோ பொங்கலடா..!


துலங்கும் தை மாதத் திங்களில் 
       தமிழர் திருநாளாம் பொங்கலடா..!
தையல் வைக்கும் பொங்கலைப்போல்
       தமிழர் உள்ளம் பொங்குதடா..!
துள்ளி இவரும் காளையைப் போல்
        நம் தமிழர் வீரம் துள்ளுதடா..!
உழவர்கள் ஏற்றம் பெறும் நாளிதுதான்
    சொல்லுங்கள் பொங்கலோ பொங்கலடா..!

(எனது வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

அன்புடன்

மோகனன்)