அரசின் கையில்
இருக்க வேண்டிய
கல்வியும் மருத்துவமும்
இன்று தனியார்களின் பிடியில்…
தனியார்களிடம் கூட
இருக்கக்கூடாத
மதுவும் குடிநீரும்
இன்று அரசின் கையில்…
இதற்கு பெயர்தான்
குடிமக்கள் விரும்பும் ஆட்சியாம்..?
இருக்க வேண்டிய
கல்வியும் மருத்துவமும்
இன்று தனியார்களின் பிடியில்…
தனியார்களிடம் கூட
இருக்கக்கூடாத
மதுவும் குடிநீரும்
இன்று அரசின் கையில்…
இதற்கு பெயர்தான்
குடிமக்கள் விரும்பும் ஆட்சியாம்..?
உங்க ‘குடி’ஆட்சியும்?
********************************
நானெழுதிய புதிய சிறுகதை: கல்லூத்துப்பட்டி ஆலமரம்!
12 comments:
நச்.......!
நச்சு ஆட்சிங்க...
இதை எதிர்க்க முடியா நம் இயலாமையை என்ன சொல்ல!?
வணக்கம்
இனியாவது ஞானம் பிறக்கட்டும்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நடு மண்டையில் நச்! என சம்மட்டியால் அடித்தது போன்ற கவி வரிகள். கல்வியும், மருத்துவமும் அரசின் கீழ் கொண்டு வரப்படல் வேண்டும்.. அதுவும் கல்வி மாநில அரசின் சுயாதீன கட்டுக்குள் வர வேண்டும். மருத்துவம் மத்திய, மாநில அரசுகளின் சரி சம பங்களிப்புக்குள் வர வேண்டும். வேண்டும் என்றால் தனியாரை உபரி பங்களிப்புக்களில் முதலீடு செய்ய வைக்கலாம். ஆனால் பிடி அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும்.
குடியாட்சி இப்படி ‘குடி ஆட்சி’யாக மாறும் என்று இந்திய அரசியல் சட்டத்தை இயற்றியபோது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நல்ல கருத்துக்கவிதை வாழ்த்துக்கள்!
எதிர்க்க வேண்டும் ராஜி... ஆம் ஆத்மி என்ற ஒன்று உருவாகவில்லையா...
அதுபோல் தமிழ்நாட்டிலும் ஒன்று உருவாக வேண்டும்...
ஞானம் நமக்கா? அரசியல்வாதிக்கா? 'குடி' மக்களுக்கா ரூபன்...?
தங்களின் கருத்து நிச்சயம் அரசியல்வாதிகள் பரிசீலிக்க வேண்டியது நீலவண்ணன்...
இணைப்பிற்கும் பிணைப்பிற்கும் நன்றி தோழரே...
நன்றி சபாபதியாரே...
டாஸ்மாக் இலக்கு ,உங்களை மாதிரி கேள்வி கேட்கிறவங்களை குடிக்க வைத்து படுக்க வைப்பதே !
'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..?' என்ற மொழிக்கேற்ப இருப்பவன் நான் தலைவா...
படுக்க வைப்பதென்றால் எவராலும் ஆகாத காரியமது...
தங்களுடைய இணைப்பிற்கும் கருத்திற்கும் நன்றி பகவான்ஜி...
Post a Comment