ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, August 9, 2010

நிலவைப்பிரிந்து என்றும்..!


நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!

(ஓர் நாள் என்னவள் என்னிடம் கேட்டாள்.. ''என்ன மறந்துடுவியா..? என்ன விட்டு போயிடுவியா..?'' என்று... அவளுக்கு இக்கவிதை மூலமாக என் பதிலைத் தந்தேன்..!)4 comments:

வெறும்பய said...

நல்ல வரிகளுடன் நயமாக பின்னப்பட்டிருக்கிறது...

மோகனன் said...

தங்களின் நயமான வாழ்த்திற்கு எனது நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

''என்ன மறந்துடுவியா..? என்ன விட்டு போயிடுவியா..?''\\\\\

இப்படி அவர் கேட்டதற்கு,
உங்களின் நம்பிக்கையின்மையான
பேச்சுக் காரணமாய் இருந்திருக்கலாம்,
அதனால்...ஒரு பயம் தோன்றி
இப்படிக் கேட்டிருக்கலாம்,

முழு நம்பிக்கை வைத்திருந்தால்
இப்படியொரு கேள்வி வந்திருக்குமா
நண்பரே!?


நிலவைப்பிரிந்து என்றும்
நீலவானம் இராது..!
அதுபோலத்தான்
பெண்ணே நானும்\\\\\

மோகனன் நீலவானத்தில்தான்..அழகாய் மின்னும்
“தாரகை”யும் இருக்கின்றதல்லவா?

கரைப்பவர் கரைத்தால்
கல்லும் கரையுமுங்கோ...

மோகனன் said...

வாங்க கலா...

காலமும் சூழலும் அவளை அப்படி கேட்க வைத்தது... இப்போதெல்லாம் அவள் அப்படிக் கேட்பதில்லை தோழி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!