ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, August 11, 2010

உன்னிடத்தில் நானும்..!

'நீ எனக்கு வேண்டவே
வேண்டாமென்று...
சொல்லிய பின்பும்
ஏனடா என்னையே
சுற்றிச் சுற்றி
வருகிறாய்' என்றாய்..!
மலர் வேண்டாமென்று
சொன்னால் மட்டும்
வண்டு விட்டு விடுமா என்ன..?
தேனிருக்கும் இடத்தைச்
சுற்றித்தானே
அதுவும் சுற்றி வரும்..!
அது போலத்தான் பெண்ணே
உன்னிடத்தில் நானும்..!



6 comments:

கலா said...

மலர் வேண்டாமென்று
சொன்னால் மட்டும்
வண்டு விட்டு விடுமா என்ன\\\\\\

மோகனன் நான் எழுதிய ஒரு கவிதை
ஞாபகத்துக்கு வருகிறது......

திகட்டத் திகட்டத் தேன் எடுத்து
திரும்பிப் பாராமல்...
கவலையும் களங்கமும் இல்லாமல்
பறந்து விட்டது கள்ளத் தேனீ
பாவம்! மலர்

பறக்க முடியாமல்
பரிதவிப்புடன்
கவலையும் கண்ணீருமாய்
களங்கமுடன்
சுமக்கின்றது சுமையொன்றை.

கலா said...

கவனம்...
அபூர்வ மலரொன்று வண்டு
வந்தமர்ந்தால் மூடிக்கொள்ளுமாம்,
அதன் இரை அதுதான்!

தேனென்று பறப்பதை விடுத்து...
மலரென்று இரசித்தால்
பலியாவதைத் தவிர்கலாமல்லவா!!

தேனிக்கு எங்கே புரிவது?

மோகனன் said...

வாங்க கலா...

தாங்கள் முதலில் சொன்னது... முற்றிலும் உண்மை...

//திகட்டத் திகட்டத் தேன் எடுத்து
திரும்பிப் பாராமல்...
கவலையும் களங்கமும் இல்லாமல்
பறந்து விட்டது கள்ளத் தேனீ
பாவம்! மலர்

பறக்க முடியாமல்
பரிதவிப்புடன்
கவலையும் கண்ணீருமாய்
களங்கமுடன்
சுமக்கின்றது சுமையொன்றை...//

தாவரங்களுக்கு இது வரம்..! கன்னித் தாய்களுக்கு இது அபஸ்வரம்..!

தங்களின் கவிதை மிக மிக அருமை தோழி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டதும் முற்றிலும் உண்மை தோழி..!

அந்த தாவரத்தின் பெயர் நெப்பந்தஸ்... அது தேன் அருந்தவரும் பூச்சி இனங்களை விழுங்கி ஏப்பம் விட்டு விடும்...

இது ஆணிற்கும், பெண்ணிற்கும் பொருந்தும்... அதுவும் எக்கலாத்திலும் இது பொருந்தும்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

மோகனன் மிக்க நன்றி
உங்கள் {மலர்} தகவலுக்கும்....
அன்புக்கும்,பாராட்டுக்கும்.

மோகனன் said...

பாராட்டுதலுக்கு உரியவர் நீங்கள் கலா...

இதில் நன்றியறிவித்தல் எதற்கு..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!