ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 19, 2010

உன்னழகில் சுகப்'பட்டு..!'

யார் நெய்த பட்டடி அது...
உன் கைப்பட்டு...
உன்னுடல் பட்டு...
உன் இடை பட்டு...
உன் கால் பட்டு...
தன் அழகை தொலைத்துவிட்டு
உன்னழகில் சுகப்பட்டு
என் மனதை சுழற்றிய பட்டுதான்
இன்று நீ காட்டியிருந்த
காஞ்சிப் பட்டு..!

நெய்தவனுக்கு
கை வலித்ததோ இல்லையோ..?
உன் பட்டணிந்த அழகைப் பார்த்து
என் மனது வலித்தது...
நான் அந்த பட்டாக இல்லையே என்று..!

(என்னவளை பட்டுப்புடவையில் முதன் முதலில் தரிசித்தபோது எழுதிய கவிதை இது..!)4 comments:

S.PREM KUMAR said...

Pattai patri chelamai thatti irukiririrkal kavithaiai kalakkal

மோகனன் said...

வாங்க பிரேம் குமார்...

உங்க கண் பட்டு, மனம் பட்டு பின்னூட்டம் எழுதியமைக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Vijai Mohan said...

unga kavithygal migavum arumy...

varunikka varthy illai...

nice...

மோகனன் said...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி விஜய்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!