ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 26, 2010

மும்பை தாக்குதல் - இரண்டாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டிரண்டு
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் இரண்டாமாண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)
6 comments:

A.R. Surendhar said...

hi mohan,

ungaludya kavidhai migavum yenakku pidithirukirathu ungalai pol yenakkum thamizhlil kavidhai yezhudha vendum yendra aasai irukkirathu thamizh ilakiyangalai yenakku katru tharuvirgala naan chennail thaan irukiren

www.thamizhaithedi.blogspot.com idhu yennudaya blogger yennudaya yezhuthukalai padithu paarthu neengal kooravum
ippadikku
suren

சிவகுமாரன் said...

வணக்கம் நண்பரே.
நீங்கள்
தமிழ் ஆர்வலர் என
அறிந்தததால்
என் கவிதைகளுக்கான
வலைப்பதிவை இணைத்துள்ளேன்.
பார்த்து உங்கள் விமர்சனங்களை இடவும்.
நான் மேலும் எழுத உங்கள் பின்னூடங்கள்
உறுதுணையாய் இருக்கும்.

,Please visit www.sivakumarankavithaikal.blogspot.com


ன் மேலும் எழுத உங்கள் பின்னூடங்கள்
உறுதுணையாய் இருக்கும்.

அன்புடன்
சிவகுமாரன்

மோகனன் said...

அன்பு சுரேந்தர்...

எனக்குத் தெரிந்தவரை சொல்லித் தருகிறேன்... காரணம் நான் கற்றது விரல் நுனி மண் துகள் கூட இல்லை...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

வாங்க சிவகுமாரன்...

தங்களின் விருப்பப்படியே செய்து விடுகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

very nice

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...

அடக்கடி (சு)வாசிக்க வாங்க..!