ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, May 3, 2011

எனைப் பிரிந்தது உன்..! - காதல் தோல்விக் கவிதை



எனை மறந்தது உன் மனமென்றால்
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!




20 comments:

Natu said...

காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!

Very nice lines Mohanan sir.....

by

Bhuvana

மோகனன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி புவனா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Kathal tholvi

Maalayil malarkal uthernthu povathan ragasiyam arivaya namba?

Mottai iruntha malarai suriyan thottu parka entha hormone suranthathal epadi poothayoo Malarea…….

Unnai parkathan uthethirupan
Oru naal muluvathum rasitherupan
Vetkathil neeum surungi poga
Malaiyil avanum marainthu ponan
Malarea Neeum uthernthu ponai karanam…?
‘Kathal’ Tholvi thane………?

Etho enathu kutti kerukal

By
Bhuvana

மோகனன் said...

மிகவும் அருமையான கவிதை தோழி...

அற்புதம்... அட்டகாசம்...

நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்குங்கள்...

Natu said...

Oru kavi thalaivan ennai paradiyamaiku perumai kolkeren.

By Bhuvana.

மோகனன் said...

அன்பான புவனாவிற்கு...

நான் கவித்தலைவனல்ல... நான் மிகவும் எளியவன் புவனா...

தங்களின் அன்பிற்கு நன்றி...

கலா said...

ம்ம்மம்... அந்தக் காதலால்...இவ்வளவு தொல்லையா?
எனக்குக் கொஞ்சம் காண்பிச்சுக் கொடுங்க அந்தக் காதல்
என்கிற....அடங்காப்பிடாரியை, நாலுவார்த்தை நறுக்கெனக்
காதைப்பிடித்துத் திருகிக் கேட்கிறேன்...

சரி,சரி...யாரோ எங்கிட்ட 143 என்கிறார்கள்
அது என்ன சமாச்சாரம் என்று கொஞ்சம்
கேட்டுவிட்டு வருகிறேன்.......................

மெய்யில் காதலென்ற உணர்வினால்..
கடும்கஷ்ரப்பட்டு_அவளின்
பொய்யில் புரட்டியெடுத்த அன்புநோக்கி
அம்புவிட்ட கவி தைக்கதான் செய்கிறது

boobalan said...

Great mohanan.. Excellent words.......

Jothi said...

மிக மிக அருமை.. போங்க....

மோகனன் said...

காதலை யாரும் காண்பித்துக் கொடுக்க முடியாது கலா... அதை உணரத்தான் முடியும்...


உங்க 143 சமாச்சாரம் என்னாச்சு?


அம்புவிட்ட கவி உங்களை தைத்து காயப்படுத்துவதை விட, என்னைக் காயப்படுத்தியவளை தைக்கத்தான் வேண்டுகிறேன்...


வருகைக்கும், நிறைவான பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள் கலா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பூபாலன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க ஜோதி...

வந்தவுடன் போங்கன்னு சொல்லீட்டீங்களே... எங்கே போவது..?

Unknown said...

ungal kayathy aatrinalum vadukkalai yenna seiya mudiyum. varappogum vasanthathy yethirkol tholanea.

மோகனன் said...

வடுக்களை மாற்ற முடியாதுதான்...

தங்களின் மேலான அன்பிற்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Kathal
Kadaloram Katru vangum Kanni pen
Unarvenum Alaikaloda uravadum velaiyil
Kan theranthu parkeral Karaiserum tholaivil kadarkaraium illai
Karam koduthu uthava kathalanum illai
Uyirai kapatra uravukalum illai.

by Bhuvana

மோகனன் said...

கவிதை நன்றாக உள்ளது.. அதில் சில திருத்தம் வேண்டும் தோழி...

கடலோரம் காற்று வாங்கும் பெண் என சொல்லிவிட்டீர்கள்... அப்புறம் எங்கே கடற்கரை இல்லை என்று சொல்வீர்கள்..?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..?

natarajanp said...

Thavarai sutiyamaiku mekka natre Mohanan Sir........

Thiruthi kolkeren.

By
bhuvana

மோகனன் said...

நன்றி தோழி...

அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

Anonymous said...

Miga Miga Azhagana Kavidhai... Vaarthaigalai unaramudindhadhu...

"என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!"

Chanceless Lines...
Innumum idhu pondra unmaiyana kaadhal kaadhalargal irukiradha irukiraargala...?...!!! Aacharyam dhan...

by
Ranjani

மோகனன் said...

ரசித்துணர்ந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரஞ்சனி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!