இங்கிருக்கும் தென்றலே
என்னவனை தீண்டிவிட்டு
எனை வந்து சேர்வாயா..?
என்று என்னவள்
தீந்தென்றலை தூது விட்டாள்..!
அவளின்றி அணு உலையாய்
கொதித்துக் கொண்டிருந்த
என் தேகத்தில்
அவளைத் தீண்டிய தென்றல்
குளிர் காற்றாய் எனை மோதியது..!
குளிர வைத்த தென்றலை
அவளிடம் திருப்பி அனுப்ப மனமில்லை…
அவள் வாசத்தை
அது சுமந்து வந்திருந்ததால்…
அதை என் சுவாச அறைக்குள்
சிறை பிடித்தேன்…
என் கனவறையில்
அவளுக்குள் சிறைப்பட்டேன்..!
******
பூந்தென்றல் எனக்காக
தீந்தென்றலை தூது விட்டது
அவளைத் தீண்டிய தென்றலை
திருப்பி அனுப்ப மனமின்றி
சுவாச அறைக்குள் சிறைபிடித்து
உயிர் நிறைத்தேன்..!
அது உயிர் நிறை தேன்..!
******
4 comments:
தென்றலை இமய மலையில் இருந்து தூது விட்டிருப்பாளோ ?கவிதையே ஜில்லென்று இருந்தால் அவள்..???!
இமயத்தில் இருந்து தூது அல்ல... அவள் இதயத்தில் இருந்து தூது விட்டாள்.
அதான் நெஞ்'சில்' சில் சில்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வணக்கம்
அருமையான கவிதை அர்த்தம்முள்ள கவி வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி ரூபன்....
Post a Comment