தோள் கொடு தோழா…
தோள் கொடு..!
தாய்மையைக் காக்க தோள் கொடு!
வாள் எடு தோழா…
வாள் எடு..!
பெண்மையைக் காக்க வாள் எடு..!
கருவறையைத் தாங்குவது
கோவில் எனில்
ஒவ்வொரு தாயும் கோவிலடா..!
கருவறையில் இருப்பது
கடவுள் எனில்
ஒவ்வொரு மனிதரும் கடவுளடா..!
பெண்மையில் இருப்பது
தாய்மை எனில்
ஒவ்வொரு பெண்ணும் தாயடா..!
தாயைப் பழிக்கும் நாய்களை ஒழிக்கும்
தாய்த்திரு நாட்டில்
பாலியல் கொடுமை ஏனடா..?
பெண்மையை காப்பதே
ஆண்மை என்பதை
மறந்தவன் காமுகனடா…
காமவெறி கொண்டு அலையும்
காமுக நாய்களை
வேட்டையாடுவோம் வாடா..!
காமுக நாய்களை சிறையிலடைத்து
விருந்து கொடுக்கும்
சட்டங்கள் வேண்டாம் போடா..!
குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
அவன் குடலை உருவி
சுடலைக்கு அனுப்புவோம் வாடா..!
பெண்ணியம் காக்கும் சட்டங்கள்
வேண்டுமென்று
வெடித்து முழங்குவோம் வாடா..!
கற்பினை பொதுவினில் நிறுத்தி
கண்களில் கண்ணியம் பொருத்தி
பெண்மையை காத்திட வாடா..!
(பாலியல் வன்முறைக்கு ஆளாகி, இருதினங்களுக்கு முன் இறந்து போன தில்லி மாணவிக்காக மட்டுமல்ல, இந்த வன்முறைக்கு இலக்காகி, இலக்கற்றுப் போன ஒவ்வொரு பெண்ணிற்கும் இக்கிறுக்கல் சமர்ப்பணம்.
நமை ஈன்ற அன்னையும் பெண்ணே. நம்முடன் பிறந்த சகோதரியும் பெண்ணே.. நமை திருமணம் செய்யும் மனைவியும் பெண்ணே.. நமை சரிசமமாய் நடத்தும் தோழியும் பெண்ணே... நமக்கு பிறக்கும் மகளும் பெண்ணே... பெண்களின்றி ஆண்களில்லை.
இனியொரு பாலியல் வன்கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, இப்புவியில் இல்லாமல் செய்ய ஒவ்வொரு ஆண்மகனும் உறுதி எடுப்போம். ஏனெனில் ஆணினத்தால்தான் பெண்ணினம் சிலுவையில் அறையப்படுகிறது.
இனி ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் பெண்மையைக் காப்போம். ஆண்மையுடன் வாழ்வோம்...
உங்களனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2013)
10 comments:
காமுக நாய்களை சிறையிலடைத்து
விருந்து கொடுக்கும்
சட்டங்கள் வேண்டாம் போடா..!
ஆதங்கம் பண்பாடு காக்கும் நம் நாட்டில் இப்படியான நிகழ்வுகள் கனத்துப்போனது நெஞ்சம்.
(பாலியல் வன்முறைக்கு ஆளாகி, இருதினங்களுக்கு முன் இறந்து போன தில்லி மாணவிக்காக மட்டுமல்ல, இந்த வன்முறைக்கு இலக்காகி, இலக்கற்றுப் போன ஒவ்வொரு பெண்ணிற்கும் இக்கிறுக்கல் சமர்ப்பணம்.
மிக்க நன்றி சகோதரரே .இனிய புத்தாண்டில் எண்ணியதெல்லாம் ஈடேற என் வாழ்த்துக்கள் !.........
அன்புத் தோழி சசிகலாவிற்கு நன்றி
ஆதங்கம் மறையும்... ஆதவனாய் நல்லவைகள் பிறக்கும்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அம்பளடியாள் அவர்களுக்கு...
நன்றிக்காக செய்யவில்லை. ஒவ்வொரு ஆணின் கடமை இது என செய்தேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தனி மனித ஒழுக்கம் மட்டுமே இத்தகைய சமூக குற்றங்களைத் தடுக்கும். அது ஆணாக இருந்தாலும் சரி .பெண்ணாக இருந்தாலும் சரி.
என்ன தவம் செய்தாய் கத்தியே இல்லாமல் காம நாய்கலை குத்தினாய் நீ வாழ நான் வணங்குகிறன்
நமை ஈன்ற அன்னையும் பெண்ணே. நம்முடன் பிறந்த சகோதரியும் பெண்ணே.. நமை திருமணம் செய்யும் மனைவியும் பெண்ணே.. நமை சரிசமமாய் நடத்தும் தோழியும் பெண்ணே... நமக்கு பிறக்கும் மகளும் பெண்ணே... பெண்களின்றி ஆண்களில்லை.
இனியொரு பாலியல் வன்கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, இப்புவியில் இல்லாமல் செய்ய ஒவ்வொரு ஆண்மகனும் உறுதி எடுப்போம். ஏனெனில் ஆணினத்தால்தான் பெண்ணினம் சிலுவையில் அறையப்படுகிறது.
இனி ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் பெண்மையைக் காப்போம். ஆண்மையுடன் வாழ்வோம்...
these lines are fantastic. good.
விமாலவிற்கு எனது நன்றி...
அன்பு அனானிக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றி...
வாங்க சங்கீதா...
பாராட்டிற்கு நன்றி...
Post a Comment