ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 11, 2015

அடி நிலவே..!
கார் குழல்
வேய்ங் குழல்
கரும் பூங்குழல்
சேர்ந்ததுன் குழல்..!

வேல்விழி
கயல்
விழி
மான்
விழி
சேர்ந்ததுன்
விழி..!

செவ்விதழ்
செங்காந்தள் இதழ்
செந்தாமரை இதழ்
சேர்ந்ததுன் இதழ்..!

மணி மொழி
மடல்
மொழி
தேன்
மொழி
சேர்ந்ததுன்
மொழி..!

குறுநகை
மகிழ்நகை
நறுமுகை
சேர்ந்ததுன்
நகை..!

மலர் அழகு
மாங்கனி அழகு
முயல் அழகு
சேர்ந்ததுன் மேலழகு..!

கொடி இடை
பிடி இடை
தளிர் இடை
சேர்ந்ததுன் இடை..!

புள்ளி மான் நடை
துள்ளும் மீன் நடை
சங்கத் தமிழ் நடை
சேர்ந்ததுன் நடை..!

பொன்னுடல்
பூவுடல்
தேனுடல்
சேர்ந்ததுன்
உடல்..!

அடி நிலவே
உனைப்
பார்த்ததும்
வீழ்ந்து விட்டேன்
நீ
அழகின் மொத்த நிரல்..!
2 comments:

ரூபன் said...

வணக்கம்
அழகிய வரிகள் வாழ்த்துக்கள்

நேரம் இருக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகனன் said...

நன்றி ரூபன்...

நிச்சயம் நேரமிருக்கும்போது வருகிறேன்...

தங்களின் அன்புக்கு நன்றி...