வீடு, மனை விற்பனைக்கு
என்று முதல் பக்கத்தில்
வண்ணமயமான
விளம்பரத்தை வெளியிட்டு விட்டு
ஏரி, குளங்கள் ஆக்ரமித்து
வீடுகள் கட்டப்பட்டன
என்ற செய்தியை
கடைகோடி மூலையில்
வெளியிட்டு
தங்கள் ஊடக அறத்தை
நிரூபித்துக் கொள்கின்றன
பத்திரிகைகள்...
**************
நீர் நிலையை
அழித்தெடுத்து
ஏரிக்குள் வீடு கட்டி
விவசாயிகளின்
வயிற்றில் அடித்தான்
ஒருவன்...
பேராழியாய்ப்
பெருக்கெடுத்து
அவன் வயிற்றில்
அடித்தது பெருமழை...
***************
2 comments:
நல்லாயிருக்கு நண்பா...
நீ ஒருத்தன்தான் இத சொல்ற....
எனக்கு நீதான் ஆறுதல்...
உனக்கு அதுகூட நான் சொல்றதில்லை...
மகிழ்ச்சி நண்பா... இனிய பொங்கல் வாழ்த்துகள்
Post a Comment