ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, January 20, 2014

உலகில் சிறந்த பூ!


'உன்னை நான் முதன்முதலில்
சந்தித்தபோது
என் தலையில் பூ கூட
வைக்கவில்லையடா'
என்று நீ அடிக்கடி
வேதனையோடு கூறுவதை
நிறுத்திக்கொள் பெண்ணே…
வறுமையின் காரணமாய்
அன்று நீ பூச்சூடாத போதும்
உன் அழகிய அதரங்களில்
என்றும் வறியாத சிரிப்’பு’ இருந்தது…
அதைவிட சிறந்த பூ
இந்த உலகில் எதுவுமில்லை..! 




16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிச் சொல்லுங்க... அருமை...

வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...

அதரத்தில் புன்னகையை சூடியுள்ளதாக சொல்வதுண்டு. பூவும் அங்குண்டு என நயம்படச் சொல்லியுள்ளீர்கள். நல்ல உவமை.வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

அருமையாக கவிதையை முடித்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

சாமுராய் said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா :)
நீங்க தலைப்புக் குடுத்தா கவிதை குடுக்கிறதுல கர்ணனாமே? எனக்கு "வள்ளல்" எண்டுற தலைப்பில ஒரு (காதல்) கவிதை?
வாழ்த்துக்கள் :)

Anonymous said...

வணக்கம்

கவிதையின் வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

உங்களிடம் உவமை பலிக்குமா நடன சபாபதி அவர்களே...

அன்பிற்கு நன்றி...

மோகனன் said...

நன்றி 'தனிமரம்' நேசன்...

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே தோழா... விரைவில் தோப்பாகுங்கள்...

மோகனன் said...

வணக்கம் சாமுராய்...

நான் கர்ணன் எல்லாம் இல்லை... யாரோ தவறாக உங்களுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்...

எதாச்சும் கிறுக்குவேன் அப்பப்போ... அவ்ளோதான்... அதை நீங்க எல்லோரும்தான் கவிதைங்கறீங்க...

அப்பதான் எனக்கு தெரியும்... ஓ இதுக்குப் பேர்தான் கவிதயான்னு... நான் ஒரு கத்துக்குட்டி சாமுராய்...

'வள்ளல்' தலைப்பில் வேண்டுமா... ஏற்கெனவே இந்த தளத்தில் இந்த தலைப்பில் ஒரு காதல் கவிதை இருக்கிறது... . ('வள்ளலிடம் கஞ்சத்தனம்..?' - http://tamilkkavithai.blogspot.in/2010/02/blog-post_10.html)

இருப்பினும் அந்த சாயல் ஏதுமின்றி வேறென்றைத் தரமுயற்சிக்கிறேன்

அடுத்த கிறுக்கல் வள்ளல்தான்..

நன்றி சாமுராய்...

மோகனன் said...

வாங்க ரூபன்...

(என்னைப் போல்)அரூபமாய் இருந்த நீங்கள்... தற்போது ரூபமெடுத்திருக்கிறீர்கள்.. நன்றி..!

இராஜராஜேஸ்வரி said...

புன்னகைப்பூக்கள்...1

மோகனன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிங்க ராஜேஸ்வரி...

'பரிவை' சே.குமார் said...

கவிதை நன்று நண்பா...

மோகனன் said...

நன்றி நண்பா...

Anonymous said...

பூ வலைப்பூ இல்லையா. அருமை

மோகனன் said...

பூவென நினைத்து கவிதைகளை நுகரும் உங்களைப் போன்ற பட்டாம்பூச்சிகளுக்கு இது வலைப் பூ தான் நண்பரே...