இடையழகில் பூட்டுகிறாய்
மயக்குறு விள்ளல்!
இதழழகில் காட்டுகிறாய்
முல்லைப்பூ எள்ளல்!
விழியழகில் நீட்டுகிறாய்
கயல்களின் அள்ளல்!
மார்பழகில் காட்டுகிறாய்
மனம்மயக்கும் கள்ளல்!
மதியழகில் தீட்டுகிறாய்
அசாத்திய மள்ளல்!
சிகையழகில் காட்டுகிறாய்
மேகத்தின் மேடுபள்ளல்
நகையழகில் கூட்டுகிறாய்
நறுந்தேனின் நள்ளல்!
என்னிதயத்தில் இட்டுவிட்டாய்
எப்போது வந்து நீக்குவாய்
மனதிலுள்ள பொள்ளல்!
மயிலிறகென வருடுகிறாய்
பேச்சினில் சுள்ளல்!
சிரித்து எனை சிக்கவைத்தாய்
மையலெனும் சள்ளல்!
உன்னிடம் ஈர்த்து விட்டாய்
காதல்தனை கொள்ளல்!
கனவுகளில் ஆழ்த்திவிட்டாய்
நினைவுகள் உள்ளல்!
பெண்ணினத்தை நாண வைத்தாய்
நீயே பேரழகின் வள்ளல்!
கயல் = மீன், மதி = அறிவு, மள்ளல் = வலிமை,
கள்ளல் = திருடுதல், சிகை = கூந்தல், பள்ளல் = பள்ளம்,
நள்ளல் = உறவு கொள்ளுதல், தொள்ளல் = துளை,
பொள்ளல் = வடு, சுள்ளல் = வலிமை, மையல் = காதல்,
சள்ளல் = சேறு, சிக்கல், உள்ளல் = நினைத்தல், மகிழ்தல்)
சாமுராய் said...
நீங்க தலைப்புக் குடுத்தா கவிதை குடுக்கிறதுல கர்ணனாமே? எனக்கு "வள்ளல்" எண்டுற தலைப்பில ஒரு (காதல்) கவிதை?
வாழ்த்துக்கள் :)