ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, February 13, 2014

எனை மனிதனாக செதுக்கியவளே! - காதலர் தின சிறப்புக் கவிதை!




உன்னோடு அமர்ந்து வாழ்வின்
யதார்த்தங்களைப் பேசும் போது
உலகத்தை மறக்கிறேன்!
உனையே உலகமாய் சுகிக்கிறேன்
என் துக்கங்களை
உன்னோடு பகிர்ந்து கொள்கையில்
எனக்காக நீ வருந்துவதை
முழுவதுமாய் தவிர்க்கிறேன்!
என் சுகங்களை சொல்லும் போது
உனது முத்துப்பல் தெறிக்க
நீ சிரிப்பதை ரசிக்கிறேன்!
வாழ்வில் தடுமாறும்போதெல்லாம்
"உனக்காக நான் இருக்கிறேன்"
எனும் மந்திர வார்த்தைகளை
நீ மயிலிறகாய் வருடி விடும் போது
தடம் மாறாமல் இருக்கிறேன்!
இத்தனையும் மொத்தமாய் எனக்குச் செய்து
எனை மனிதனாக செதுக்கியவளே
உனக்கு என் காதலர் தின வாழ்த்துகள்!
உன் காதல் நினைவுகளில் என் வாழ்க்கைகள்!


(எனை நேசிக்கும் கவிதைக்கு இந்த கவிதை சமர்ப்பணம். உலக காதலர்கள் அனைவருக்கும் ‘இனிய காதலர் தின வாழ்த்துக்கள்’)

*******************************

நானெழுதிய புதிய சிறுகதை: கல்லூத்துப்பட்டி ஆலமரம்!
 




7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மந்திர வார்த்தைகளை ரசித்தேன்... என்றும் தொடரவும் வேண்டும்...

வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...

உண்மையில் காதலை நேசிப்பவர்களால்தான் இப்படிப்பட்ட கவிதையை புனைய முடியும். இனி தங்கள் கவிதைதான் காதலர் தினக் கவிதை என அங்கீகரித்துவிடலாம்! கவிதையும் அருமை. அதோடு தந்துள்ள இதய வடிவிலுள்ள ரோஜா பூச்செண்டும் அருமை. வாழ்த்துக்கள்!

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

வார்த்தை பூச்செண்டுக்கு நன்றி நடனசபாபதி அவர்களே...

மோகனன் said...

கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்...

தங்களின் அன்பிற்கு நன்றி தனபாலரே...

Unknown said...

உருகியும் மருகியும் அமைத்த காதல் கவிதை நன்று.

முத்துப்பல் தெறிக்க - என அமைய வேண்டும்.

வருடி விடும் போது - என்பது சரி

சிறுசிறு பிழைகளும் இன்றி அமைய வேண்டும் உங்கள் கவிதைகள்-

அதற்கெனவே இதனைச் சுட்டிக் காட்டினேன்.

சரியெனில் ஏற்கவும்.

உங்களைச் செதுக்கிய கவிதைக்கும் எனது இனிய வாழ்த்துகள்.

நட்புடன்
சங்கீதா.

மோகனன் said...

அன்பு சங்கீதாவிற்கு...

தங்களின் ரசனைக்கு நன்றி...

எழுத்துப்பிழைகள் இன்றி எழுத முயற்சிக்கிறேன்... திருத்திவிட்டேன்..

உங்களின் அன்புக்கும் நன்றி...