ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 26, 2010

மும்பைக்கு வாய்த்த பொல்லாத ஓர் இரவு..! - மும்பை தாக்குதல் இரண்டாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி





பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…

உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டிரண்டு...

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...

(இன்றோடு இத்தயரச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாண்டுகள் நிறைவடைகிறது... இச்சமரில் இன்னுயிரை நீத்த எம் மக்களுக்கும், என் வீரமறவ ராணுவ வீரர்களுக்கும் கண்ணீரோடு என் கவியாஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்... முதலாமாண்டு எழுதிய கவிதையை இங்கே சிறு மாற்றத்துடன் மீள்பதிவிலிட்டிருக்கிறேன்...)



8 comments:

எல் கே said...

என்னுடைய அஞ்சலிகளும்

மோகனன் said...

அப்படியே ஆகட்டும் தோழரே...

Prem S said...

மெய் சிலிர்த்தேன் உங்கள் கவிதையால்.. நன்றி

மோகனன் said...

சிலிர்ப்பது மட்டுமல்ல தோழா.. ஒன்றுபடுவோம்... அந்த கேடு கெட்ட தீவிரவாத தே.. மகன்களை விரட்டியடிப்போம்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

'பரிவை' சே.குமார் said...

//இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...
//


அப்படியே ஆகட்டும் தோழரே...

மோகனன் said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Dhoorica said...

read ur blog...
loved ur poems...
especially mumbai crisis poem...

"விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்..."

lovable lines...

மோகனன் said...

அன்புத் தோழி/தோழருக்கு

தங்களின் ரசிப்பிற்கு எனது நன்றிகள்... என் மனதில் உள்ள வலியைத்தான் அதில் பதிவு செய்தேன்... அந்த வலி இந்தியனாய் இருக்கும் ஓவ்வொருவருக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை... தங்களுடைய வாழ்த்தும் அதைத்தான் நீருபிக்கிறது...

கவிதையைப் படித்து விட்டு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி....

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...