ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 1, 2010

புதிய திருக்குறளில் எயிட்ஸ் விழிப்புணர்வு...

தியை விடுத்து பரத்தையிடம் சித்தமாயின்
பத்திடுமே பாழும் ஏப்பு

ஐந்து நிமிட சுகத்திற்கலைந்தால் ஏப்பான

விந்தேயுனை வீழ்த்தி விடும்

கலவிக்கும் கற்புண்டு காணீர் தவறின்

விலையாகும் உமது உயிர்

உயிரான உறவோடி ராமல் வெளிசெல்லின்

உயிர்க்கொல்லி உடலில் சேரும்

உறையுள்ள தென்று முறையற்று நடப்பின்

குறைகொள் குழவி பிறக்கும்

தெளியாத குருதியை தேகத்தில் ஏற்றினால்

எளிதில் வருமாம் ஏப்பு

உமதில் லாளை ஏய்த்தால் காத்திருக்கிறது

எமனின் வாகனம் ஏப்பு

உனைநம் பியுள்ளோரை ஏமாற்றினால் வீணே

வினையாகும் உமது குலம்

பெற்றோரீந்த உடலை ஏப்புக் கிரையாக்கின்

கற்றோனாயினும் இழி கழுதையே

குலம்காக்க உனை ஈன்றால் - உடல்திமிரால்

மலத்தினும் கீழானாய் மனிதா

------------------------------------------------------------------------
ஃ எதுக்கும் அறிஞ்சொற்பொருள் கொடுத்திடறேன்

தி = மனைவி, பரத்தை= விலைமாதர் , விலைமாதன் , ஏப்பு = எயிட்ஸ், உறை = காண்டம், குறைகொள் = எயிட்ஸ் நோய் பாதிப்பு, குழவி = குழந்தை, தெளியாத குருதி = பரிசோதனை செய்யப்படாத ரத்தம், இல்லாள் = மனைவி, வினையாகும் = அழிந்து விடும்.

(நமக்கு அய்யன் திருவள்ளுவர் அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்க... எதோ எனக்கு தோணிணத குறள் வடிவத்துல எழுதியிருக்கேன்... குறையிருந்தால் சுட்டுங்க... ஒழுக்கமா வாழ உறுதியெடுப்போம்... ஏப்பு என்கிற எயிட்ஸை ஒழிப்போம்...

என்றென்றும் அன்புடன்

மோகனன்
)

இது குறித்து நானெழுதிய பிற கவிதைகளைப் படிக்க வேண்டுமா..?
உலக எயிட்ஸ் தினம் - விழிப்புணர்வுக் கவிதைகள்22 comments:

சே.குமார் said...

அருமையா இருக்கு நண்பா உன் எய்ட்ஸ் குரல்.

சே.குமார் said...

அருமையான குறள் தந்திருக்கிறாய் நண்பா... கமல் கொடுத்த குரலுக்காக அவரின் படம் இணைத்துள்ளாய்... வாழ்த்துக்கள்.

மோகனன் said...

உனது ஆரதவுக் குரலுக்கு எனது நன்றிகள் தோழா...

மோகனன் said...

உண்மைதான் எயிட்ஸை ஒழுக்க அந்த கலைஞன் குரல் கொடுத்திருக்கும் போது...

இந்த சாதாரண தமிழன் குரல் கொடுத்திருக்கிறேன்... எடுபடுமா தெரியவில்லை... ஒருவர் திருந்தினாலும் இக்குறளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பேன்...

வருகைக்கும், கருத்துரைக்கும் இனிய நன்றிகள் நண்பா...

தமிழ்த்தோட்டம் said...

உங்கள் சமுதாய விழிப்புணர்வு குறள் அருமை.. பாராட்டுக்கள்

மோகனன் said...

தங்களின் வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..ஸ

vinoth eda said...

Nalla irukku...

vinoth

மோகனன் said...

மிக்க நன்றி திரு வினோத்...

இந்த முயற்சிக்கு வாசக்ர்களிடமிருந்து இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்...

இது சாதாரண கவிதை நடையாக இருந்திருந்தால், எதிர்பார்த்திருக்க மாட்டேன்... குறள் வடிவ முயற்சியாயிற்றே... அதான் எதிர்பார்ப்பு...

கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு உலக எயிட்ஸ் தினத்தன்றும் இது போன்றதொரு குறளை எழுத ஆசைப்பட்டும் முடியாம்ல போனது.. அது இந்தாண்டுதான் நிறைவேறியது...

எனது நண்பர்கள் வட்டத்தில் கூட இந்த புதிய முயற்சி அவ்வளவாக அறியப்படவில்லை... அறிமுகமில்லா நண்பர் நீங்கள் பாராட்டியது எனக்கு மகிழ்வைத் தருகிறது...

நன்றி... நன்றி... நன்றி...

Sowndarambihai S said...

super..............!

மோகனன் said...

மிக்க நன்றி தோழி...

இந்த முயற்சிக்கு வாசகர்களிடமிருந்து இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்...

இது சாதாரண கவி நடையாக இருந்திருந்தால், எதிர்பார்த்திருக்க மாட்டேன்... குறள் வடிவ முயற்சியாயிற்றே... அதான் எதிர்பார்ப்பு... பெண்ணினத்திற்காக எழுதப்பட்டதற்கு... ஒரு பெண்ணிடமிருந்து முதல் பாராட்டு கிடைப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே.
நன்றி!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_07.html

மோகனன் said...

தங்களின் அன்பிற்கு எனது நன்றிகள் தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Sakthi mass said...

Anbullavarkku vanakkam
Neengal eluthiya kavithai nantra
irrunthathu.Meelum nalla kavithaikalai ellutha vallthukkal


ANBUDAN

sakthi

Vinoth said...

ungaladhu kavithai thala mugavari.... tharungal,

tamil illatha itam illai, irundhalum indha idathil tamil mudhanmai illai,

thangaladhu kavithaikal than yenadhu tarpodhaya aarudhal,

adhikamai yezhudhungal, yenakkum yezhuthu aarvam undu,

naanum oru naal yezhudhuvena?

vinoth

மோகனன் said...

திரு சக்தி அவர்களுக்கு...

தங்களின் வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

மேலும் பல கவிதைகளை கண்டீப்பாக எழுதுகிறேன்...

நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

அன்பான வினோத் அவர்களுக்கு...

தங்களின் வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

எனது கவிதைகள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறதென்றால் இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு..
மேலும் பல கவிதைகளை கண்டீப்பாக எழுதுகிறேன்...

உங்களுக்குள்ளும் அந்தத் திறமை இருக்கிறது... உங்களாலும் எழுத முடியும்... நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Vinoth said...

yenadhu madal thangalukku sumaiya,

siramam irundhal porutharula vendum,

ungalai vida sirappaga yezhudha mudiyum yendru thondravillai,

kaaranam, thangaladhu kuralthan,

adhil magizhdhuthan, thangaladhu natppu vattathil valam vara asai,

nandri,

vinoth, (ennai vinoth endru azhaithal thankum,)

மோகனன் said...

அன்பான வினோத் அவர்களுக்கு...

தங்களின் மடல் எனக்கு தொந்தரவல்ல...

என்னை விட சிறப்பாக உங்களால் முடியும்...

குறள் எனது சிந்தையில் உதித்தது அதை எழுத்து வடிவமாக்கி இருக்கிறேன்... அவ்வளவே...

உங்களுக்குள்ளும் அந்தத் திறமை இருக்கிறது... உங்களாலும் கண்டீப்பாக எழுத முடியும்... நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

நாணல் said...

நல்ல முயற்சி மோகன்....

மோகனன் said...

நன்றி நாணல்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ANJALI said...

Very Nice........

i like it ganesan............


By 5...........

மோகனன் said...

மிக்க நன்றி அஞ்சலி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!